Markham பகுதியில் கடந்த இரண்டு மாதங்களாக பெண்களை அணுகி, அவர்களுக்கு முன்பாக தனது பாலுறுப்பை வெளிப்படுத்தியதாகக் கூறப்படும் நபர் ஒருவரை York Regional Police கைது செய்துள்ளனர்.
ஜூன் 9 முதல் ஆகஸ்ட் 14 வரை, McCowan Road மற்றும் Steeles Avenue சுற்றுவட்டாரத்தில் இதுபோன்ற ஐந்து தனித்தனி சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவங்கள் அனைத்திலும் ஒரே நபரே தொடர்புடையவர் என விசாரணையில் தெரியவந்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து ஆகஸ்ட் 20ஆம் திகதி, இந்தச் சம்பவங்கள் தொடர்பாக அந்தப் பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த பொலிஸார் சந்தேகநபரை கண்டுபிடித்து கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர் Toronto-வைச் சேர்ந்த 37 வயதான Chong Chen என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அவர் மீது 6 அநாகரிகச் செயல் குற்றச்சாட்டுகள், 2 Criminal Harassment குற்றச்சாட்டுகள் மற்றும் இரவு நேரத்தில் சந்தேகத்திற்கிடமாக சுற்றித்திரிந்ததாக ஒரு குற்றச்சாட்டு உள்ளிட்டவை சுமத்தப்பட்டுள்ளன.
மேலும் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கக்கூடும் என பொலிஸார் நம்புவதால், இதுபோன்ற சம்பவங்களை எதிர்கொண்டவர்கள் அல்லது தகவல் தெரிந்தவர்கள் முன்வருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
