Durham பிராந்தியத்தில் முதலாம் நிலை கொலைக் குற்றவாளி ஒருவர் 72 மணிநேரத் தற்காலிக விடுதலையில் (Unescorted Temporary Absence – UTA) விடுவிக்கப்பட்டுள்ளதை அடுத்து, பொதுமக்களுக்குப் பாதுகாப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
65 வயதான Darren Scott Ray எனும் நபர், முதலாம் நிலை கொலைக் குற்றத்திற்காக ஆயுள் தண்டனை அனுபவித்து வருபவர். தற்போது இவர் Oshawa பகுதியில் தங்கியுள்ளார்.
இவர் சமூகத்திற்கு “குறிப்பிடத்தக்க அச்சுறுத்தலை” (Significant risk) ஏற்படுத்தக்கூடியவர் என Durham Regional Police Service எச்சரித்துள்ளது.
தனது விடுப்பு காலத்தில் இவர் Durham எல்லைக்குள்ளேயே இருக்க வேண்டும். மது, போதைப்பொருள் மற்றும் ஆயுதங்களை வைத்திருக்கக் கூடாது என்ற நிபந்தனைகளுடன் இவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
முக்கியமாக, 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுடன் இருக்கக் கூடாது என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது.
இவரது நடமாட்டத்தை பொலிசார் கண்காணித்து வருகின்றனர்.
பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறும், ஏதேனும் தகவல் தெரிந்தால் 905-579-1520 என்ற எண்ணிற்கு அழைக்குமாறும் கோரப்பட்டுள்ளனர்.
