அமெரிக்கப் பொருட்கள் மீதான சில கட்டுப்பாடுகளை தளர்த்துவது உள்ளிட்ட பல சலுகைகளை வழங்க கனடா தயாராக இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதில், சில மாகாணங்களில் அமெரிக்க மதுபானங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடைகளை முடிவுக்குக் கொண்டுவருவதும் முக்கிய விடயமாக உள்ளது.
அத்துடன், அமெரிக்க வாகனங்கள் மீதான கனடிய வரிகள் மற்றும் பால் உற்பத்திப் பொருட்களுக்கான சந்தை அணுகல் தொடர்பிலும் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றன. இவை அமெரிக்க தரப்பின் முக்கிய கோரிக்கைகளில் அடங்குகின்றன.
இதற்குப் பதிலாக, ஆகஸ்ட் 19ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்படவுள்ள புதிய 50 சதவீத அமெரிக்க வரிகளை கைவிட வேண்டும் என கனடா வலியுறுத்தி வருகிறது. இந்தப் புதிய வரிகள் சுமார் 20 பில்லியன் டொலர் பெறுமதியான கனடிய ஏற்றுமதிகளை பாதிக்கக்கூடும்.
மேலும் கனடிய steel மற்றும் aluminum துறைகள் மீது ஏற்கனவே விதிக்கப்பட்டுள்ள அமெரிக்க வரிகளிலும் நிவாரணம் பெறுவதற்கு Ottawa முயற்சி செய்து வருகிறது.
பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடைபெற்று வந்தாலும், இரு நாடுகளுக்கும் இடையில் இன்னும் முக்கிய கருத்து வேறுபாடுகள் இருப்பதாக கனடிய வர்த்தக அமைச்சர் Dominic LeBlanc தெரிவித்துள்ளார்.
