Scarborough-வில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது – மேலும் பல சந்தேகநபர்களுக்கு பொலிஸார் வலைவீச்சு!

Scarborough பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் பல சந்தேகநபர்களை Toronto பொலிஸார் தேடி வருகின்றனர்.

Midland Avenue மற்றும் Eglinton Avenue East பகுதிக்கு அருகிலுள்ள Gilder Drive பகுதியில், வெள்ளிக்கிழமை இரவு 7 மணிக்கு சற்று முன்னர் பலர் ஒருவரை ஒருவர் நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்துவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருவதற்கு முன்னதாகவே சந்தேகநபர்கள் பல்வேறு திசைகளில் தப்பிச் சென்றுள்ளனர். எனினும், அந்த இடத்தில் துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டிருந்தமை விசாரணையாளர்களால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்பட்டதற்கான உடனடி தகவல் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒருவர் தற்போது பொலிஸ் காவலில் உள்ள நிலையில், தப்பிச் சென்றுள்ள ஏனைய சந்தேகநபர்களை அடையாளம் காணும் நடவடிக்கைகள் தொடர்கின்றன.

Related Articles

Latest Articles