றொரண்டோடோவில் $3.5 மில்லியன் பெறுமதியான போலி கால்பந்து ஆடைகள் பறிமுதல்!

2026 உலகக்கிண்ண கால்பந்து போட்டிகள் (FIFA World Cup) ஆரம்பமாகவுள்ள நிலையில், கனடாவின் Toronto நகரில் சுமார் 3.5 மில்லியன் டொலர் பெறுமதியான போலி விளையாட்டுப் பொருட்களை பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

கனடா வரலாற்றிலேயே கைப்பற்றப்பட்ட மிகப்பெரிய போலி கால்பந்து சீருடை (Soccer Jersey) மோசடி இதுவென றொரண்டோடோ பொலிஸார் (Toronto Police) தெரிவித்துள்ளனர்.

Mississauga பகுதியில் உள்ள கிடங்கு (Warehouse) ஒன்றில் உலகக்கிண்ணப் போட்டிகளை இலக்கு வைத்து போலிப் பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டுள்ளதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், மே 26 அன்று பொலிஸார் அதிரடிச் சோதனை நடத்தினர்.

இதன்போது FIFA, Nike, Adidas மற்றும் Puma ஆகிய முன்னணி நிறுவனங்களின் போலி முத்திரைகளுடன் இருந்த 16,000 இற்கும் மேற்பட்ட ஆடைகள், தொப்பிகள், கொடிகள் மற்றும் இரண்டு போலி உலகக்கிண்ணப் பதக்கங்கள் (FIFA World Cup trophies) என்பன கைப்பற்றப்பட்டன.

இது தொடர்பாக Milton பகுதியைச் சேர்ந்த Ramy Jaber (41) மற்றும் Mississauga பகுதியைச் சேர்ந்த Walid Sarhan (62) ஆகிய இருவர் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது மோசடி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நடப்பு ஜூன் மாதத்தில் றொரண்டோடோ ஸ்டேடியத்தில் (Toronto Stadium – BMO Field) 6 உலகக்கிண்ணப் போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில், ரசிகர்கள் விழிப்புடன் இருக்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Related Articles

Latest Articles