‘ராக்கெட் வேகத்தில் பரவியுள்ள AI மோசடிகள் ‘ – டொராண்டோ பொலிசார் கடும் எச்சரிக்கை!

செயற்கை நுண்ணறிவு எனப்படும் AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் நிதி மோசடிகள் கடந்த ஆறு மாதங்களில் ராக்கெட் வேகத்தில் அதிகரித்துள்ளதாக டொராண்டோ பொலிசார் (Toronto Police Service) கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

டொராண்டோ நிதிக்குற்றப் பிரிவின் அதிகாரி டேவிட் காபி (Det. David Coffey), 2025-ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் இருந்து இந்த வகை மோசடிகள் பாரியளவில் அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

பழைய மோசடி முறைகளே தற்போதும் பின்பற்றப்பட்டாலும், AI மூலம் தனிநபர்களின் விபரங்களை மிகத் துல்லியமாகத் திரட்டி, மிகவும் நம்பகமான முறையில் மோசடியாளர்கள் பேசுகின்றனர் என்றும் அவர் கூறியுள்ளார்.

கடந்த 2024-ஆம் ஆண்டு 370 மில்லியன் டொலராக இருந்த இழப்பு, 2025-இல் 433 மில்லியன் டொலராக அதிகரித்துள்ளது.

காதல் மோசடிகள் (Romance scams), முதலீட்டு மோசடிகள் மற்றும் வங்கி அதிகாரிகள் போல் நடித்து ஏமாற்றுவது போன்ற செயல்களில் AI பயன்படுத்தப்படுகிறது.

“அவசரம் மற்றும் பயத்தை” ஆயுதமாகப் பயன்படுத்தும் இத்தகைய அழைப்புகள் வந்தால்  கவனமாக இருக்குமாறு பொதுமக்களை பொலிசார் அறிவுறுத்துகின்றனர்.

Video thumbnail
சுற்றிவளைப்பின் போது றொரண்டோ பொலிஸ் அதிகாரி சுட்டுக்கொலை - 19 வயது இளைஞர் மீது கொலைக் குற்றம்!
00:51
Video thumbnail
உலகக்கிண்ணக் கால்பந்து ரசிகர் திருவிழா ரத்து - ஏமாற்றமடைந்த ரசிகர்கள்!
00:59
Video thumbnail
இன்னுமொருவர் புற்றுநோயினால் பாதிக்கப்படுவதைத் தடுப்போம்!அனைவரும் வருக! விழிப்புணர்வு நடைபவனி!
01:46
Video thumbnail
வட்டி விகிதத்தில் மாற்றமில்லை - கனடா வங்கியின் முக்கிய அறிவிப்பு!
00:52
Video thumbnail
மார்க்கமில் சிறுவன் மீது ஓநாய் தாக்குதல் - பொலிஸார் அவசர எச்சரிக்கை!
01:07
Video thumbnail
றொரண்டோ FIFA உலகக் கிண்ண தொடக்க விழாவில் அனுமதியின்றி ட்ரோன் பறக்கவிட்ட இருவர் கைது!
00:39
Video thumbnail
இலங்கையில் தமிழ் கலைஞர் கைது - பிரம்டன் மேயர் கடும் கண்டனம்!
01:08
Video thumbnail
பயணக் காப்பீடு இருந்தும் ஒண்டாரியோ நபருக்கு வந்த $147,000 மருத்துவக் கட்டண அதிர்ச்சி!
01:39
Video thumbnail
றொரண்டோ பொலிஸ் அதிகாரி உட்பட இருவர் துப்பாக்கிச் சூட்டில் பட்டை காயம்!
00:46
Video thumbnail
பிராம்ப்டனில் புதிய டிரைவ்-டெஸ்ட் மையம் திறப்பு!
00:39

Related Articles

Latest Articles