நேட்டோ (NATO) அமைப்பில் கனடா தலைமை தாங்கும் முழு இராணுவப் பிரிகேடும் (brigade) முதன்முறையாக லாத்வியாவின் (Latvia) கிழக்குப் பகுதியில், ரஷ்யா மற்றும் பெலாரஸ் (Belarus) எல்லைகளை நோக்கி நகர்த்தப்பட்டு போர் தயார்நிலை பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன.
லாத்வியாவின் அடாசி (Adazi) இராணுவ தளத்திலிருந்து புறப்பட்ட டாங்கிகள், காலாட்படைகள், மருத்துவக் குழுக்கள் மற்றும் பொறியாளர்கள், நேட்டோவின் கிழக்கு எல்லையில் தற்காப்பு அரண்களை அமைக்கும் பல நாள் பயிற்சியில் பங்கேற்றுள்ளனர்.
2017 முதல் முன்னெடுக்கப்படும் ‘ஒப்பரேஷன் ரீஅஷூரன்ஸ்’ (Operation REASSURANCE) திட்டத்தின் கீழ் அங்குள்ள 3,000 நேட்டோ வீரர்களில் சுமார் 2,000 பேர் கனடிய ஆயுதப்படையைச் (Canadian Armed Forces) சேர்ந்தவர்களாவர்.
“நாங்கள் முன்னர் தற்காப்பு மற்றும் தடுப்பு நிலையில் இருந்தோம்; ஆனால் இப்போது எதனையும் எதிர்கொள்ளும் ‘போர் தயார் நிலைக்கு’ (ready-to-defend posture) மாறியுள்ளோம்” என பன்னாட்டுப் படைகளின் தளபதி லெப்டினன்ட் கர்னல் சைமன் மெய்லக்ஸ் (Lt.-Col. Simon Mailloux) தெரிவித்துள்ளார்.
துருக்கியேவின் (Turkiye) அங்காரா (Ankara) நகரில் நடைபெற்ற நேட்டோ உச்சிமாநாட்டில் கனடியப் பிரதமர் மார்க் கார்னி (Mark Carney), ரஷ்ய அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள இந்த இராணுவ நடவடிக்கை நீட்டிக்கப்படும் என அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
