முட்டாள்களின் தினத்தில் மில்லியனாரான கனேடியர் – $5 மில்லியன் லொட்டரி பரிசு!

ஏப்ரல் முதலாம் திகதி முட்டாள்கள் தினமென கருதப்படுவது வழமை.

இந்நிலையில் கடந்த புதன்கிழமை (ஏப்ரல் 1) நடைபெற்ற Lotto 6/49 சீட்டிழுப்பில், கியூபெக் (Quebec) மாகாணத்தைச் சேர்ந்த ஒருவர் 5 மில்லியன் டொலர் பெறுமதியான பரிசை வென்றுள்ளார்.

லொட்டரியின் ஆறு எண்களையும் சரியாகப் பொருத்தி இந்த ‘கிளாசிக் டிரா’ (Classic Draw) பரிசை அவர் தட்டிச் சென்றுள்ளார்.

இது ஏப்ரல் முதலாம் திகதி என்பதால் பலருக்கு இது ஒரு வேடிக்கையான செய்தியாகத் தோன்றினாலும், இது உண்மையான வெற்றி எனத் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதேவேளை, ஒன்டாரியோ (Ontario) மாகாணத்தில் விற்கப்பட்ட ஒரு லொட்டரி சீட்டின் வெற்றி எண்ணைப் பொருத்தி 1 மில்லியன் டொலர் பெறுமதியான ‘வைட் பால்’ (White Ball) பரிசை வென்றுள்ளது.

இருப்பினும், 20 மில்லியன் டொலர் பெறுமதியான ‘கோல்ட் பால்’ (Gold Ball) ஜாக்பாட் பரிசை இந்த முறை எவரும் வெல்லவில்லை.

இதற்கு முன்னதாக, மார்ச் 11 அன்று இணையதளம் ஊடாக லொட்டரி வாங்கிய ஒருவர் 44 மில்லியன் டொலர் ஜாக்பாட் பரிசை வென்று மில்லியனரானார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த Lotto 6/49 சீட்டிழுப்பு இன்று 4  ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறவுள்ளது.

இதில் ‘கோல்ட் பால்’ ஜாக்பாட் பரிசுத் தொகை தற்போது 22 மில்லியன் டொலராக உயர்ந்துள்ளது.

அதிர்ஷ்டத்தை எதிர்நோக்கி காத்திருக்கும் கனடியர்களுக்கு இது ஒரு உற்சாகமான வாய்ப்பாக அமைந்துள்ளது.

Video thumbnail
ஒருவரின் கணினியிலிருந்து ஆரம்பித்த தாக்குதல்! 165 நிறுவனங்களையும் 100 மில்லியன் மக்களையும் பாதித்ததா
01:57
Video thumbnail
Metrolinx முதல் LCBO வரை — ஒன்ராறியோவின் 8 முக்கிய பொது நிறுவனங்கள் அரசின் ஆய்வுக்குள்!
01:10
Video thumbnail
றொரண்டோவில் வாடகை செலுத்த முடியாமல் திணறும் மக்களுக்கு நல்ல செய்தியா?
01:27
Video thumbnail
ஒரே வாரத்தில் ஓராண்டு மழையின் நான்கில் ஒரு பங்கு!
00:49
Video thumbnail
ஐந்து நிமிடங்களில் வீட்டைவிட்டு வெளியேற வேண்டிய நிலை!
01:07
Video thumbnail
Metro Vancouver முழுவதையும் சூழ்ந்த காட்டுத்தீப் புகை!
01:28
Video thumbnail
கனடா சுற்றுலாத்துறையில் பாரிய வளர்ச்சி - ஒரே காலாண்டில் $28.4 பில்லியன்!
01:05
Video thumbnail
பாதுகாப்பு சாதனங்களிலிருந்தே Bitcoin கொள்ளை!
01:34
Video thumbnail
வானில் மோதிய இரண்டு பயிற்சி விமானங்கள் - ஒருவர் உயிரிழப்பு!
00:57
Video thumbnail
Hamilton குடியிருப்பாளர்களுக்கு இரண்டு மாதங்களுக்குப் பிறகு கிடைத்த சுத்தமான குடிநீர்!
01:00

Related Articles

Latest Articles