கனடாவைச் சேர்ந்த இரும்புத் தொழிலாளியான Jonathon Pearce, கனடா நாடே இல்லை என்ற இணைய சதியாலோசனையை நம்பி CRA (Canada Revenue Agency) நிறுவனத்திடம் இருந்து 40 மில்லியன் டொலருக்கும் அதிகமான போலி வரித் தொகையைத் திரும்பப் பெற்றுள்ளார்.
ஒன்ராறியோ (Ontario) மாகாணம் Temiskaming Shores பகுதியைச் சேர்ந்த இவர், எந்தவித சரிபார்ப்பும் இல்லாமல் தனது வங்கிக் கணக்கில் இலட்சக்கணக்கான டாலர்களைப் பெற்றதாகத் தெரிவித்தார்.
இது போன்ற “Sovereign” இயக்கங்கள் மூலம் நூறு மில்லியன் கணக்கான டாலர்கள் ஏமாற்றப்பட்டுள்ளதாக CBC’s the fifth estate விசாரணையில் தெரியவந்துள்ளது.
நிதி அமைச்சர் François-Philippe Champagne தலைமையிலான அதிகாரிகள் மற்றும் CRA அமைப்பு முறைகேடுகளைத் தடுத்து, சம்பந்தப்பட்ட நபர்கள் மீதும் குருக்களான AJ DeSwart, Angela Albright Bowolin மற்றும் Bernard Yankson மீதும் தீவிர விசாரணைகளையும் சோதனைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.










