ட்ரூடோ விமான நிலையத்தில் கடும் போக்குவரத்து நெரிசல்: பயணிகளுக்கு எச்சரிக்கை!

கனடாவின் மாண்ட்ரியல் (Montreal) நகரில் அமைந்துள்ள ட்ரூடோ சர்வதேச விமான நிலையத்தில் (Trudeau International Airport), வசந்தகால விடுமுறை (Spring Break) காலத்தை முன்னிட்டு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

அடுத்த 10 நாட்களில் நாளொன்றுக்கு சுமார் 58,000 பயணிகள் வரை விமான நிலையத்தைப் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

விமான நிலையத்தில் தற்போது நடைபெற்று வரும் பாரிய புனரமைப்புப் பணிகள் மற்றும் வாகன நிறுத்துமிடம் (Parking garage) இடிக்கப்படுவதால், வாகனங்களை நிறுத்துவதிலும் ஏற்றி இறக்குவதிலும் கடும் சிரமம் ஏற்பட்டுள்ளது.

பயணிகள் தங்கள் விமான நேரத்திற்கு குறைந்தது 3 மணித்தியாலங்களுக்கு முன்னதாகவே வருமாறும், வாகன நிறுத்துமிடங்களை முன்கூட்டியே முன்பதிவு செய்யுமாறும் விமான நிலைய ஊடகப்பேச்சாளர் ஆன்-சோபி ஹேமல் (Anne-Sophie Hamel) கேட்டுக்கொண்டுள்ளார்.

சுமார் 10 பில்லியன்  டொலர் செலவில் மேற்கொள்ளப்படும் இந்த விரிவாக்கப் பணிகள் 2028-ஆம் ஆண்டு நிறைவடையும் போது, தற்போதைய போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Video thumbnail
கனடாவில் சிறுவர்களுக்குச் சமூக ஊடகங்கள் மற்றும் ஏ.ஐ (AI) தடை? லிபரல் கட்சி விவாதம்!
01:21
Video thumbnail
கனடாவில் எரிபொருள் விலை குறைப்பு - மத்திய அரசின் எரிபொருள் வரி 5 மாதங்களுக்கு நிறுத்தம்!
01:25
Video thumbnail
ஒன்ராறியோ சிறைச்சாலைகளில் குளறுபடி - ஒவ்வொரு ஆண்டும் பெருமளவான கணக்கான கைதிகள் தவறுதலாக விடுதலை!
01:10
Video thumbnail
டொனால்ட் ட்ரம்ப் - பாப்பரசர் மோதல் - செயற்கை நுண்ணறிவுப் படத்தைப் பகிர்ந்து ட்ரம்ப் பரபரப்பு!
01:15
Video thumbnail
டொனால்ட் ட்ரம்ப் - பாப்பரசர் மோதல் - செயற்கை நுண்ணறிவுப் படத்தைப் பகிர்ந்து ட்ரம்ப் பரபரப்பு!
01:07
Video thumbnail
38,000 கிலோ பிளாஸ்டிக் மறுசுழற்சி – சாதனை செய்தது வான்கூவர்!
01:10
Video thumbnail
றொரண்டோவில் கனமழை - வீதிகளில் நீர் தேக்கம், சாரதிகளுக்கு எச்சரிக்கை!
01:12
Video thumbnail
ரெஜினாவில் (Regina) நள்ளிரவில் தீ வைப்பு - பாதுகாப்பு கெமராவில் பதிவான அதிர்ச்சி காட்சி!
01:05
Video thumbnail
பிராம்ப்டனில் கோர விபத்து - எஸ்.யு.வி கார் லொரியின் அடியில் சிக்கி நபர் பலி!
01:02
Video thumbnail
ஒன்ராறியோவில் பல பில்லியன் டொலர் செலவில் சிறை கொள்ளளவை அதிகரிக்க திட்டம்!
01:25

Related Articles

Latest Articles