Toronto-வின் மத்தியப் பகுதியில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இன்று அதிகாலை இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
200 Wellesley Street East அருகில்: Wellesley மற்றும் Bleeker Street பகுதியில் புதன்கிழமை அதிகாலை சுமார் 12:20 மணியளவில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
பாதிக்கப்பட்ட முதியவர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட தற்போது கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்தத் தாக்குதல் குறித்த மேலதிக விபரங்களையோ, சந்தேக நபர்கள் அல்லது தாக்குதலுக்கான பின்னணி குறித்த தகவல்களையோ Toronto Police இதுவரை வெளியிடவில்லை.
இச்சம்பவம் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தவர்கள் உடனடியாக காவல்துறையினரையோ அல்லது Crime Stoppers அமைப்பையோ தொடர்பு கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளனர்.
