கொல்லப்பட்ட றொரண்டோ பொலிஸ் அதிகாரிக்கு சிஎன் கோபுரம் விளக்குகளை அணைத்து அஞ்சலி!

வியாழக்கிழமை இரவு, ஒவ்வொரு மணிநேரத்தின் முதல் 5 நிமிடங்களுக்கும் சிஎன் கோபுரத்தின் (CN Tower) பிரகாசமான விளக்குகள் அணைக்கப்பட்டு, மறைந்த அதிகாரி மார்க் பினிசோட்டோவுக்கு (Marc Pinizzotto) மரியாதை செலுத்தப்பட்டது.

கடந்த மார்ச் மாதம் அமெரிக்க தூதரகத்தில் (U.S. Consulate) நடந்த துப்பாக்கிச் சூடு உட்பட பல சம்பவங்கள் தொடர்பான விசாரணைக்காக, அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் சோதனை நடத்திய போது, 43 வயதான மார்க் பினிசோட்டோ சுட்டுக்கொல்லப்பட்டார்.

மறைந்த அதிகாரியின் உடல் பிரேத பரிசோதனை அலுவலகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்ட போது, நூற்றுக்கணக்கான காவல் அதிகாரிகள் திரண்டு கண்ணீருடன் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

இந்த வழக்கில் 19 வயதான நிக்கோலஸ் பென்னட் (Nicholas Bennett) என்பவருக்கு எதிராக முதலாம் நிலை கொலைக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

தலைமறைவாக உள்ள சாரா ஜாபி (Zara Jabbi) என்ற 19 வயதுடைய மற்றொரு சந்தேக நபரை பொலிஸார் தேடி வருகின்றனர்.

றொரண்டோ மேயர் ஒலிவியா சௌ (OliviaChow), ஒன்டாரியோ பிரீமியர் டக் போர்ட் (Doug Ford) மற்றும் பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) உள்ளிட்ட பல தலைவர்கள் இந்த சம்பவத்திற்கு தங்களது இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்திற்கு சில நாட்களுக்கு முன்புதான், ஒன்டாரியோ மாகாண பொலிஸ் அதிகாரி தருண் பாலி (Tarun Bali), ஹியர்ஸ்ட் (Hearst) நகருக்கு அருகே வாகனம் மோதி உயிரிழந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. www.cp24.com

 

 

Video thumbnail
சுற்றிவளைப்பின் போது றொரண்டோ பொலிஸ் அதிகாரி சுட்டுக்கொலை - 19 வயது இளைஞர் மீது கொலைக் குற்றம்!
00:51
Video thumbnail
உலகக்கிண்ணக் கால்பந்து ரசிகர் திருவிழா ரத்து - ஏமாற்றமடைந்த ரசிகர்கள்!
00:59
Video thumbnail
இன்னுமொருவர் புற்றுநோயினால் பாதிக்கப்படுவதைத் தடுப்போம்!அனைவரும் வருக! விழிப்புணர்வு நடைபவனி!
01:46
Video thumbnail
வட்டி விகிதத்தில் மாற்றமில்லை - கனடா வங்கியின் முக்கிய அறிவிப்பு!
00:52
Video thumbnail
மார்க்கமில் சிறுவன் மீது ஓநாய் தாக்குதல் - பொலிஸார் அவசர எச்சரிக்கை!
01:07
Video thumbnail
றொரண்டோ FIFA உலகக் கிண்ண தொடக்க விழாவில் அனுமதியின்றி ட்ரோன் பறக்கவிட்ட இருவர் கைது!
00:39
Video thumbnail
இலங்கையில் தமிழ் கலைஞர் கைது - பிரம்டன் மேயர் கடும் கண்டனம்!
01:08
Video thumbnail
பயணக் காப்பீடு இருந்தும் ஒண்டாரியோ நபருக்கு வந்த $147,000 மருத்துவக் கட்டண அதிர்ச்சி!
01:39
Video thumbnail
றொரண்டோ பொலிஸ் அதிகாரி உட்பட இருவர் துப்பாக்கிச் சூட்டில் பட்டை காயம்!
00:46
Video thumbnail
பிராம்ப்டனில் புதிய டிரைவ்-டெஸ்ட் மையம் திறப்பு!
00:39

Related Articles

Latest Articles