குயின்ஸ் பார்க் அருகே கார் விபத்து – குடிபோதையில் வாகனம் செலுத்திய பெண் கைது!

றொரண்டோவின் (Toronto) குயின்ஸ் பார்க் (Queen’s Park) பகுதியில் சனிக்கிழமை அதிகாலை இடம்பெற்ற கார் விபத்து ஒன்றைத் தொடர்ந்து, பெண் ஒருவர் குடிபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கல்லூரி வீதி (College Street) மற்றும் பல்கலைக்கழக அவென்யூ (University Avenue) சந்திப்பில், அதிகாலை 2:30 மணிக்கு முன்பதாக இரண்டு வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானதாக அவசரப்பிரிவினருக்கு தகவல் கிடைத்தது.

றொரண்டோ பொலிஸாரின் (Toronto Police) தகவல்படி, விபத்துக்குள்ளான இரண்டு வாகனங்களின் ஓட்டுநர்களும் சம்பவ இடத்திலேயே தங்கியிருந்தனர்.

இந்த விபத்தில் காயமடைந்த ஒருவர் உயிருக்கு ஆபத்தில்லாத காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அதேவேளை, விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநர்களில் ஒருவரான பெண், குடிபோதையில் வாகனம் செலுத்தியதாக (Impaired driving) கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்த மேலதிக விபரங்கள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை.

Related Articles

Latest Articles