குடியேறிய மறுநாளே வெளியேறிய வாடகைதாரர் – ஒரு மாத வாடகையை செலுத்த நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

பிரிட்டிஷ் கொலம்பியா (B.C.) மாகாணத்தில் வாடகைக்கு குடியேறிய ஒரே நாளில் வீட்டை விட்டு வெளியேறிய பெண் ஒருவருக்கு, ஒரு மாத முழு வாடகையையும் செலுத்துமாறு சிவில் தீர்ப்பாயம் (Civil Resolution Tribunal) அதிரடி உத்தரவிட்டுள்ளது.

MS என்ற பெண், DC என்பவருடன் அறைத் தோழியாக (Roommate) இருக்க சம்மதித்து, ஆகஸ்ட் 28 அன்று குடியேறினார்.

ஆனால், அறை சிறியதாக இருப்பதாகவும், புகைப்படங்களில் காட்டியபடி இல்லை என்றும் கூறி அடுத்த நாளே வெளியேறினார்.

இது தொடர்பாக DC தொடர்ந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாயம், வாடகைதாரர் வெளியேறுவதற்கு ஒரு மாத கால முன்னறிவிப்பு (Notice) வழங்கியிருக்க வேண்டும் என்று சுட்டிக்காட்டியது.

அறையின் அளவு குறித்து தவறான தகவல் அளிக்கப்பட்டதாக அந்தப் பெண் முன்வைத்த வாதத்தை நீதிமன்றம் நிராகரித்தது.

அவர் ஏற்கனவே காணொளி வாயிலாக அறையைப் பார்வையிட்டதுடன், அங்குள்ள கட்டிலின் அளவு குறித்தும் முன்னரே தெளிவுபடுத்தப்பட்டதை தீர்ப்பாயம் கண்டறிந்தது.

இதனையடுத்து, நிலுவை வாடகை மற்றும் நீதிமன்றக் கட்டணம் உட்பட மொத்தம் $1,285.54 தொகையை அறை உரிமையாளருக்கு வழங்குமாறு தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

Related Articles

Latest Articles