கனடியர்களுக்குப் புதிய எச்சரிக்கை – பாண் (Bread) விலை நிர்ணய இழப்பீட்டுத் தொகையின் பெயரில் பாரிய மோசடி!

பாண் விலை நிர்ணய வழக்கில் (Bread Price-Fixing Class Action), பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படவுள்ள 500 மில்லியன் டொலர் இழப்பீட்டுத் தொகையைப் பெற்றுத் தருவதாகக் கூறி புதிய குறுஞ்செய்தி (SMS) மோசடிகள் அரங்கேறி வருகின்றன.

கனடாவின் லோப்லா (Loblaw) மற்றும் ஜார்ஜ் வெஸ்டன் (George Weston Ltd.) நிறுவனங்களுக்கு எதிராகத் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. \

மார்ச் 1 முதல் இதுதொடர்பான ஒன்பது புகார்கள் கனடிய மோசடி எதிர்ப்பு மையத்திற்கு (CAFC) கிடைத்துள்ளன.

பாதிக்கப்பட்டவர்களில் பலருக்கு, “ஏப்ரல் முதலாம் திகதிக்குள் உங்கள் தகுதியைச் சரிபார்த்து 182 டொலர் இழப்பீட்டைப் பெற்றுக்கொள்ளுங்கள்” என குறுஞ்செய்தி வந்துள்ளதாக கூறப்படுகிறது.

902 மற்றும் 306 போன்ற பகுதி எண்களிலிருந்து குறுஞ்செய்திகள் வந்துள்ளன.

இந்தச் செய்திகளில் உள்ள இணைப்புகளைக் கிளிக் செய்தால், அது அசல் இணையதளத்தைப் போன்றே வடிவமைக்கப்பட்ட போலித் தளத்திற்கு இட்டுச் செல்கிறது.

அங்கு வங்கி அட்டை (Credit/Debit Card) விபரங்களைக் கோருவதன் மூலம் மக்களின் பணம் திருடப்படுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

இது குறித்து வழக்கறிஞர் ஜே ஸ்ட்ரோஸ்பெர்க் (Jay Strosberg) விளக்கமளிக்கையில், இது முற்றிலும் ஒரு மோசடி என்றும், இந்த வழக்குத் தொடர்பாக எந்தவொரு குறுஞ்செய்தியும் மக்களுக்கு அனுப்பப்பட மாட்டாது என்றும் உறுதிப்படுத்தியுள்ளார்.

உண்மையான இழப்பீட்டு விண்ணப்பங்களுக்கான காலக்கெடு கடந்த 2025 டிசம்பர் 12-ஆம் திகதியுடன் முடிந்துவிட்டது.

தகுதியுள்ளவர்களுக்கான கொடுப்பனவுகள் ஏப்ரல் மாதம் முதல் மின்னஞ்சல் (e-transfer) அல்லது காசோலை மூலமாக மட்டுமே அனுப்பப்படும்.

எனவே, வங்கி அட்டை விபரங்களைக் கோரும் எந்தவொரு குறுஞ்செய்தியையும் நம்ப வேண்டாம் எனப் பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Video thumbnail
ஒருவரின் கணினியிலிருந்து ஆரம்பித்த தாக்குதல்! 165 நிறுவனங்களையும் 100 மில்லியன் மக்களையும் பாதித்ததா
01:57
Video thumbnail
Metrolinx முதல் LCBO வரை — ஒன்ராறியோவின் 8 முக்கிய பொது நிறுவனங்கள் அரசின் ஆய்வுக்குள்!
01:10
Video thumbnail
றொரண்டோவில் வாடகை செலுத்த முடியாமல் திணறும் மக்களுக்கு நல்ல செய்தியா?
01:27
Video thumbnail
ஒரே வாரத்தில் ஓராண்டு மழையின் நான்கில் ஒரு பங்கு!
00:49
Video thumbnail
ஐந்து நிமிடங்களில் வீட்டைவிட்டு வெளியேற வேண்டிய நிலை!
01:07
Video thumbnail
Metro Vancouver முழுவதையும் சூழ்ந்த காட்டுத்தீப் புகை!
01:28
Video thumbnail
கனடா சுற்றுலாத்துறையில் பாரிய வளர்ச்சி - ஒரே காலாண்டில் $28.4 பில்லியன்!
01:05
Video thumbnail
பாதுகாப்பு சாதனங்களிலிருந்தே Bitcoin கொள்ளை!
01:34
Video thumbnail
வானில் மோதிய இரண்டு பயிற்சி விமானங்கள் - ஒருவர் உயிரிழப்பு!
00:57
Video thumbnail
Hamilton குடியிருப்பாளர்களுக்கு இரண்டு மாதங்களுக்குப் பிறகு கிடைத்த சுத்தமான குடிநீர்!
01:00

Related Articles

Latest Articles