கனடா – ஐரோப்பிய ஒன்றியம் கூட்டுறவு: ‘இணை உறுப்பினர்’ என்ற சொல் நீக்கம்

கனடாவிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் (EU) இடையிலான உறவை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் மொண்ட்ரியாலில் (Montreal) இருதரப்பு உச்சிமாநாடு நடைபெறவுள்ளது.

இந்நிலையில், இந்த உச்சிமாநாட்டில் வெளியிடப்படவுள்ள கூட்டு அறிக்கையிலிருந்து “இணை உறுப்பினர்” (associate membership) என்ற பதம் நீக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.

ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் (Ursula von der Leyen), கனடாவை ஐரோப்பிய ஒன்றியத்தின் முதல் இணை உறுப்பினராக மாற்றுவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படும் என அறிவித்திருந்தார்.

இருப்பினும், ஜெர்மனி உள்ளிட்ட சில ஐரோப்பிய நாடுகள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததைத் தொடர்ந்து, தற்போதைய அறிக்கையில் “நெருக்கமான கூட்டாண்மை” (ever closer association) என்ற சொல்லாடல் சேர்க்கப்பட்டுள்ளது.

இது குறித்துக் கருத்துத் தெரிவித்த கனடிய பிரதமர் மார்க் கார்னி (Mark Carney), பெயர்களை விட இந்த கூட்டாண்மை கனடியர்களின் வாழ்க்கையிலும் நாட்டின் இறாண்மையிலும் ஏற்படுத்தும் நேர்மறையான மாற்றங்களே முக்கியம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவின் மீதான பொருளாதாரச் சார்பைக் குறைத்து வர்த்தகம், சக்தி பாதுகாப்பு மற்றும் ஆர்க்டிக் பகுதிக்கான ஒத்துழைப்பை அதிகரிக்கும் நோக்கில் இந்த உச்சிமாநாடு அமைகிறது.

Related Articles

Latest Articles