கனடா (Canada) இறுதியில் அமெரிக்காவின் (United States) 51ஆவது மாநிலமாகவே மாறும் என அமெரிக்க அதிபர் Donald Trump தெரிவித்துள்ளார்.
Arizona மாநிலத்தின் Bullhead City நகரில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய அவர், பால் மீதான கனடாவின் வரிகள் மற்றும் பிற வர்த்தகக் கொள்கைகளைச் சுட்டிக்காட்டி, கனடா அமெரிக்காவை மோசமாக நடத்துவதாகக் குற்றம்சாட்டினார்.
மேலும், Greenland போன்று கனடாவும் அமெரிக்காவுடன் இணையக் கூடும் என்றும், Lake Ontario ஏரியின் பெயரை Lake America என மாற்ற வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, கனடாவின் தொழில் அமைச்சர் Mélanie Joly மற்றும் பிரதமர் Mark Carney உள்ளிட்ட அரசியல்வாதிகளின் செயல்பாடுகள் அமெரிக்க இடைத்தேர்தலில் தலையிடுவது போல அமைந்துள்ளதாக கனடாவுக்கான அமெரிக்கத் தூதர் Pete Hoekstra சாடியுள்ளார்.
இருப்பினும், கனடாவின் இறையாண்மை விற்பனைக்குரியதல்ல என்றும், கனடா ஒருபோதும் அமெரிக்காவின் 51ஆவது மாநிலமாக மாறாது என்றும் B.C. முதலமைச்சர் David Eby மற்றும் Ontario முதலமைச்சர் Doug Ford ஆகியோர் உறுதியாகப் பதிலடி கொடுத்துள்ளனர்.
