கனடா – அமெரிக்காவை இணைக்கும் பாலம் இம்மாதம் திறப்பு: வருவாயை இழக்கும் கனடா!

பல வார கால தாமதங்கள் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் (Donald Trump) இன் விமர்சனங்களுக்குப் பிறகு, கனடாவின் வின்சர் (Windsor) மற்றும் அமெரிக்காவின் டெட்ராய்ட் (Detroit) நகரங்களை இணைக்கும் கார்டி ஹோவ் சர்வதேச பாலம் (Gordie Howe International Bridge) வரும் ஜூலை 27 அன்று திறக்கப்படவுள்ளது.

எனினும், 2012 ஆம் ஆண்டு போடப்பட்ட ஆரம்ப ஒப்பந்தத்தின்படி, பாலத்திற்கான முழு கட்டுமானச் செலவான 6.4 பில்லியன் டொலர்களை கனடாவே ஏற்றிருந்ததால், முதலீட்டைத் திரும்பப் பெறும் வரை 100% சுங்கக் கட்டண வருவாயையும் கனடாவே பெறவிருந்தது.

ஆனால், தற்போது ஏற்பட்டுள்ள புதிய சமரச உடன்பாட்டின்படி, கனடா தனது பெரும் வருவாயை இழக்கச் சம்மதித்துள்ளது.

புதிய ஒப்பந்தத்தின்படி, முதல் 15 ஆண்டுகளுக்கு பாலத்தின் சுங்கக் கட்டண லாபத்தில் 50% மட்டுமே கனடாவிற்கு கிடைக்கும்.

மீதமுள்ள 50% இரு நாடுகளுக்கும் பொதுவான ஒரு பொருளாதார மேம்பாட்டு நிதிக்குச் செல்லும்.

அத்துடன், சுங்கக் கட்டணத்தை 10% க்கும் மேல் உயர்த்தவோ அல்லது குறைக்கவோ வேண்டுமானால் கனடா அமெரிக்காவின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Video thumbnail
கனடா சுற்றுலாத்துறையில் பாரிய வளர்ச்சி - ஒரே காலாண்டில் $28.4 பில்லியன்!
01:05
Video thumbnail
பாதுகாப்பு சாதனங்களிலிருந்தே Bitcoin கொள்ளை!
01:34
Video thumbnail
வானில் மோதிய இரண்டு பயிற்சி விமானங்கள் - ஒருவர் உயிரிழப்பு!
00:57
Video thumbnail
Hamilton குடியிருப்பாளர்களுக்கு இரண்டு மாதங்களுக்குப் பிறகு கிடைத்த சுத்தமான குடிநீர்!
01:00
Video thumbnail
நிலவில் இன்று பெரும் மோதல்! SpaceX ரொக்கெட் துண்டு நிலவை மோதுகிறது!
01:02
Video thumbnail
Ontario, Quebec வாகன ஓட்டிகளுக்கு நற்செய்தி — வியாழன் 10¢ குறைகிறது எரிபொருள் விலை
01:48
Video thumbnail
மனைவி கொலையில் கைதான முன்னாள் போதகர் சிறையில் தற்கொலை: கடிதத்தில் குற்றமற்றவர் என உரிமை கோரல்!
01:03
Video thumbnail
WestJet வேலைநிறுத்தம்: தாயகம் திரும்ப முடியாமல் தவிக்கும் கனடா பயணிகள்!
01:19
Video thumbnail
மழை வெள்ளத்தில் மூழ்கிய Niagara - St. Catharines, Lincoln நகரங்களில் அவசரநிலை!
00:57
Video thumbnail
'Toronto Islands' போலி Ferry Tickets விற்கும் மோசடி இணையதளங்கள் குறித்து எச்சரிக்கை!
01:24

Related Articles

Latest Articles