கனடாவில் மீண்டும் அதிகரித்த எரிபொருள் விலை – வார இறுதியில் சிறிய சரிவு!

கனடாவின் கிங் சிட்டி (King City) உட்பட பல பகுதிகளில் ஒரே இரவில் எரிபொருள் விலை ஒரு லிட்டருக்கு சுமார் 5 காசுகள் (5 cents) வரை அதிகரித்துள்ளது.

இதனால் றொரண்டோ (Toronto) மற்றும் அல்கொன்குயின் பூங்கா (Algonquin Park) நோக்கி பயணிக்கும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். தற்போது தேசிய சராசரி எரிபொருள் விலை ஒரு லிட்டருக்கு $1.72 ஆக உயர்ந்துள்ளது.

அமெரிக்கா மற்றும் ஈரான் (Iran) இடையே இந்த வாரம் மீண்டும் மோதல்கள் வெடித்த போதிலும், இந்த வார இறுதியில் எரிபொருள் விலை சற்று குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சனிக்கிழமை 2 காசுகளும், ஞாயிற்றுக்கிழமை 3 முதல் 4 காசுகளும் குறைய வாய்ப்புள்ளதாக மலிவு விலை ஆற்றலுக்கான கனடியர்கள் அமைப்பின் தலைவர் டான் மெக்டீக் (Dan McTeague) தெரிவித்துள்ளார்.

அமெரிக்க இடைக்காலத் தேர்தலுக்கு முன்னதாக எண்ணெய் விலையைக் குறைக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் (Donald Trump) பல்வேறு முயற்சிகளை மேற்கொள்வதே இந்த தற்காலிக விலை வீழ்ச்சிக்குக் காரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், ஜூலை இறுதிக்குள் உலகளாவிய ரீதியில் கச்சா எண்ணெய் பற்றாக்குறை ஏற்படும் என்பதால், ஆகஸ்ட் தொடக்கத்தில் எரிபொருள் விலை மீண்டும் கணிசமாக உயரக்கூடும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

Related Articles

Latest Articles