கனடாவில் தொடர வாக்களித்த Alberta முதலமைச்சர் Danielle Smith!

Alberta மாகாணத்தில் இடம்பெறும் மக்கள் கருத்து கணிப்பு வாக்கெடுப்பில் referendum தான் கனடாவுடன் இணைந்திருக்கவே வாக்களித்துள்ளதாக மாகாண முதலமைச்சர் Danielle Smith தெரிவித்துள்ளார்.

Alberta மாநிலத்தில் இடம்பெற்றுவரும் முன்கூட்டிய வாக்கெடுப்பின் போது தனது வாக்கைப் பதிவு செய்த அவர், கனடாவுடன் மாகாணம் தொடர்வது தொடர்பில் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

மேலும், பெடரல் அரசாங்கத்தின் நியாயமற்ற சட்டங்கள் மற்றும் கொள்கைகளில் மாற்றங்கள் தேவைப்பட்டாலும், கனடா தொடர்ந்து செயல்பட முடியும் எனக் குறிப்பிட்டுள்ள அவர், குடிவரவு மற்றும் அரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் தொடர்பான மற்ற 9 கேள்விகளுக்கும் ஆதரவாக ‘ஆம்’ என வாக்களிக்குமாறு பொதுமக்களை வலியுறுத்தியுள்ளார்.

இந்த வாக்கெடுப்பில் மாகாணம் கனடாவிலேயே தொடர்வதா அல்லது பிரிந்து செல்வதற்கான அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுப்பதா என்பது குறித்த முக்கிய கேள்வியும் இடம்பெற்றுள்ளது.

இதற்கிடையில், எதிர்க்கட்சித் தலைவர் Naheed Nenshi உள்ளிட்ட பலரும் வாக்களித்து வரும் நிலையில், பொதுமக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த வாக்கெடுப்புக்கான அதிகாரப்பூர்வ வாக்குப்பதிவு வரவிருக்கும் திங்கட்கிழமை நிறைவடையவுள்ளது.

Related Articles

Latest Articles