கனடாவில் உணவுப் பொருள் விலைகள் ஏன் இன்னும் குறையவில்லை?

“Inflation குறைகிறது என்று சொல்கிறார்கள்… ஆனால் grocery bill மட்டும் ஏன் குறையவில்லை?” என்ற கேள்வி பல கனடியர்களிடமும் எழுந்துள்ளது.

Statistics Canada வெளியிட்டுள்ள புதிய தகவலின்படி, 2026 ஜூலை மாதத்தில் grocery store-களில் வாங்கப்படும் உணவுப் பொருட்களின் விலை, கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 3.1 சதவீதம் அதிகரித்துள்ளது.

இது ஜூன் மாதத்தில் பதிவான 3.9 சதவீத உயர்வை விட குறைவுதான். ஆனால் grocery விலைகள் தொடர்ந்து உயர்ந்துகொண்டுதான் இருக்கின்றன.

முக்கியமாக, கனடாவின் ஒட்டுமொத்த பணவீக்கம் ஜூலையில் 3 சதவீதமாக இருந்த நிலையில், மளிகை பொருட்களுக்கான பணவீக்கம் அதைவிட அதிகமாக இருந்துள்ளது.

சில பொருட்களில் நிவாரணம் கிடைத்துள்ளது. காய்கறி மற்றும் கோழியிறைச்சி பொருட்களின் விலை உயர்வு மெதுவடைந்ததுடன், சில cereal பொருட்களின் விலைகளும் குறைந்துள்ளன.

ஆனால் எல்லா பொருட்களிலும் அதே நிலை இல்லை. Fresh பழங்களின் விலைகள் மட்டும் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 6.1 சதவீதம் உயர்ந்துள்ளன. குறிப்பாக berries மற்றும் melons விலை அதிகரித்துள்ளன.

அப்படியானால் கனடாவில் உணவு ஏன் இவ்வளவு விலை உயர்ந்திருக்கிறது?

Canada தனது உணவுத் தேவையின் சுமார் 30 சதவீதத்தை இறக்குமதி செய்கிறது. சுமார் 75 வீதத்தை புதிதாக விளைவிக்கிறது. 

இதனால் வெளிநாடுகளில் ஏற்படும் மோசமான காலநிலை, பயிர் சேதம், போக்குவரத்துச் செலவு, எரிபொருள் மற்றும் உர விலை உயர்வு, Canadian dollar-ன் மதிப்பு போன்றவை நேரடியாக Canadian grocery விலைகளை பாதிக்கக்கூடும்.

2019 முதல் கனடாவில் உணவு விலைகள் சுமார் 31 சதவீதம் உயர்ந்துள்ளதாக federal economic update தெரிவிக்கிறது.

அதனால் inflation rate குறைந்தாலும், ஏற்கனவே உயர்ந்துவிட்ட விலைகள் மீண்டும் பழைய நிலைக்கு திரும்புவதில்லை. இதுவே குடும்பங்களின் grocery bill இன்னும் அதிகமாகத் தோன்றுவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று.

Video thumbnail
Toronto-வில் புதிய சுகாதார எச்சரிக்கை!
01:38
Video thumbnail
விமானம் கண்டுபிடிக்கப்பட்டது... ஆனால் விமானி எங்கே?
01:19
Video thumbnail
CA-US 50% Trump Tariff-க்கு Countdown ஆரம்பம்!
01:47
Video thumbnail
🌧️🏠 வெள்ளம் வந்தால் வீட்டுக்கு மட்டும் பாதிப்பில்லை... உங்கள் Insurance bill-க்கும் பாதிப்பு!
01:23
Video thumbnail
🚲❌ Toronto Bike Lanes அகற்றப்படுகிறதா? Ford அரசுக்கு முக்கிய நீதிமன்ற வெற்றி!
01:29
Video thumbnail
💻❌ Laptop வேண்டாம்... ✍️ கையால் எழுதுங்கள்!AI காலத்தில் மீண்டும் பேனை, பேப்பரா? 🤔
01:49
Video thumbnail
Scarborough-வில் பரபரப்பு! 🔍 கண்டெடுக்கப்பட்டது உண்மையில் மனித உடல் எச்சங்களா?
00:44
Video thumbnail
⚠️ Burlington-ல் வௌவாலுக்கு Rabies உறுதி!
01:13
Video thumbnail
கனடாவில் இருந்து தாயகம் சென்ற தமிழருக்கு நேர்ந்த சோகம்...
01:14
Video thumbnail
தமிழர் தெருவிழா சொல்லும் கதை என்ன? அதன் பின்னணி என்ன?
33:43

Related Articles

Latest Articles