“கனடியர்களின் தனிப்பட்ட Data அமெரிக்காவுக்குச் சென்று Donald Trump-ன் கட்டுப்பாட்டுக்குள் சென்றால் என்ன ஆகும்?”
இந்தக் கேள்வியை முன்வைத்து, Ontario-வில் அதிகமான Data Centres அமைக்கப்பட வேண்டும் என Premier Doug Ford வலியுறுத்தியுள்ளார்.
Association of Municipalities of Ontario மாநாட்டில் பேசிய Ford, Ontario-வில் தேவையானData Centre infrastructure உருவாக்கப்படாவிட்டால், கனடியர்களின் தகவல்கள் அமெரிக்காவுக்கு அனுப்பப்படும் அபாயம் இருப்பதாகக் கூறினார்.
அவ்வாறு நடந்தால், அந்தத் தகவல்கள் அமெரிக்க அதிபர் Donald Trump-ன் அதிகார வரம்புக்குள் செல்லக்கூடும் என்பதே Ford-ன் வாதம்.
Trump-க்கு வாய்ப்பு கிடைத்தால், “மூன்று விநாடிகளில்” கனடியர்களின் Data Centre access-ஐ துண்டித்துவிடுவார் என்றும் அவர் கூறினார்.
இதன் பின்னணியில் Ontario அரசு அண்மையில் Data Centre Playbook என்ற புதிய framework-ஐ வெளியிட்டுள்ளது.
Ontario-வுக்கு புதிய AI மற்றும் Data Centre முதலீடுகளை ஈர்ப்பதுடன், Canadian data கனடாவுக்குள்ளேயே பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே அதன் முக்கிய நோக்கங்களில் ஒன்று என அரசு கூறுகிறது.
புதிய திட்டத்தின் கீழ், பெரிய Data Centres தாங்கள் பயன்படுத்தும் மின்சாரத்தின் முழுச் செலவையும் ஏற்க வேண்டும் என்றும், உள்ளூர் சமூகங்களுக்கு பொருளாதார நன்மைகளை வழங்க வேண்டும் என்றும் Ontario அரசு முன்மொழிந்துள்ளது. தண்ணீர் பயன்பாடு மற்றும் ஒலிமாசு தொடர்பான கட்டுப்பாடுகளும் draft framework-ல் இடம்பெற்றுள்ளன.
ஆனால் எல்லோரும் இந்தத் திட்டத்தை வரவேற்கவில்லை.
Ontario-வின் சில நகராட்சிகளில் Data Centres அதிக அளவு மின்சாரம் மற்றும் தண்ணீரைப் பயன்படுத்தக்கூடும் என்பதுடன், சுற்றுச்சூழல், ஒலிமாசு தொடர்பான கவலைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.
ஆனால் Artificial Intelligence மற்றும் Data Economy வேகமாக வளர்ந்து வரும் காலத்தில், Canadian data-வின் கட்டுப்பாடு கனடாவிடமே இருக்க வேண்டும் என்பதே Ford-ன் நிலைப்பாடாகும்.
Ontario-வில் மேலும் Data Centres அமைப்பது உண்மையில் நமது தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாக்குமா?
அல்லது மின்சாரம், தண்ணீர் மற்றும் சுற்றுச்சூழலுக்கு புதிய சவால்களை உருவாக்குமா?
Ontario-வில் தற்போது இதுவே புதிய விவாதமாக மாறியுள்ளது.










