கனடாவிலிருந்து அல்பெர்ட்டா பிரிந்து செல்ல 80% மக்கள் எதிர்ப்பு: சமீபத்திய கருத்துக்கணிப்பில் வெளியான அதிரடித் தகவல்!

கனடாவின் Alberta (அல்பெர்ட்டா) மற்றும் Quebec (கியூபெக்) மாகாணங்கள் அந்நாட்டை விட்டுப் பிரிந்து செல்வதை பெரும்பான்மையான மக்கள் எதிர்க்கின்றனர்.

Angus Reid Institute (ARI) அண்மையில் நடத்திய கருத்துக்கணிப்பில், சுமார் 79 சதவீத கனடியர்கள் Alberta பிரிந்து செல்வதைத் தடுக்க விரும்புவதாகவும், 71 சதவீதம் பேர் Quebec பிரிந்து செல்வதை எதிர்ப்பதாகவும் தெரியவந்துள்ளது.

முக்கியமாக, Alberta மாகாணம் பிரிந்தால் நாட்டின் பொருளாதாரம், குறிப்பாக எண்ணெய் மற்றும் எரிவாயு துறை கடுமையாகப் பாதிக்கும் என 40 சதவீத மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

மேலும், Alberta பிரிந்து சென்றால், அமெரிக்கா (U.S.) அந்த மாகாணத்தை ஒரு புதிய மாநிலமாக இணைக்க அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக அழுத்தம் கொடுக்கும் என 80 சதவீதத்தினர் நம்புகின்றனர்.

Premier Danielle Smith (பிரீமியர் டேனியல் ஸ்மித்) எதிர்வரும் அக்டோபரில் மாகாண உரிமைகள் தொடர்பான வாக்கெடுப்பை நடத்தவுள்ளதாக அறிவித்துள்ள நிலையில், இந்தக் கருத்துக்கணிப்பு முடிவுகள் முக்கியத்துவம் பெறுகின்றன.

3,000 அதிகமான கனேடியர்களை மையப்படுத்தி மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில்  Alberta பிரிவதற்கு எதிராக  79 சதவீதத்தினரும் Quebec பிரிவதற்கு எதிராக 71 சதவீதத்தினரும் வாக்களித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Video thumbnail
கனடாவில் சிறுவர்களுக்குச் சமூக ஊடகங்கள் மற்றும் ஏ.ஐ (AI) தடை? லிபரல் கட்சி விவாதம்!
01:21
Video thumbnail
கனடாவில் எரிபொருள் விலை குறைப்பு - மத்திய அரசின் எரிபொருள் வரி 5 மாதங்களுக்கு நிறுத்தம்!
01:25
Video thumbnail
ஒன்ராறியோ சிறைச்சாலைகளில் குளறுபடி - ஒவ்வொரு ஆண்டும் பெருமளவான கணக்கான கைதிகள் தவறுதலாக விடுதலை!
01:10
Video thumbnail
டொனால்ட் ட்ரம்ப் - பாப்பரசர் மோதல் - செயற்கை நுண்ணறிவுப் படத்தைப் பகிர்ந்து ட்ரம்ப் பரபரப்பு!
01:15
Video thumbnail
டொனால்ட் ட்ரம்ப் - பாப்பரசர் மோதல் - செயற்கை நுண்ணறிவுப் படத்தைப் பகிர்ந்து ட்ரம்ப் பரபரப்பு!
01:07
Video thumbnail
38,000 கிலோ பிளாஸ்டிக் மறுசுழற்சி – சாதனை செய்தது வான்கூவர்!
01:10
Video thumbnail
றொரண்டோவில் கனமழை - வீதிகளில் நீர் தேக்கம், சாரதிகளுக்கு எச்சரிக்கை!
01:12
Video thumbnail
ரெஜினாவில் (Regina) நள்ளிரவில் தீ வைப்பு - பாதுகாப்பு கெமராவில் பதிவான அதிர்ச்சி காட்சி!
01:05
Video thumbnail
பிராம்ப்டனில் கோர விபத்து - எஸ்.யு.வி கார் லொரியின் அடியில் சிக்கி நபர் பலி!
01:02
Video thumbnail
ஒன்ராறியோவில் பல பில்லியன் டொலர் செலவில் சிறை கொள்ளளவை அதிகரிக்க திட்டம்!
01:25

Related Articles

Latest Articles