கடிகார முள்ளைத் திருப்புவதை நிறுத்தும் கனடா? B.C. மாகாணத்தின் அதிரடி முடிவு!

கனடாவின் British Columbia (B.C.) மாகாணம், இனி ஆண்டுக்கு இருமுறை நேரத்தை மாற்றும் முறையை நிரந்தரமாக நிறுத்தப் போவதாக அறிவித்துள்ளது.

இந்த முடிவு நாடு முழுவதும் புதிய கருத்தாடல்களை ஏற்படுத்தியுள்ளது

B.C. பிரதமர் David Eb  வெளியிட்டிருக்கும் ​ இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, Alberta மாகாண பிரதமர் Danielle Smith இது குறித்துப் பரிசீலிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே Saskatchewan மற்றும் Yukon ஆகிய பகுதிகள் நேர மாற்ற முறையைக் கைவிட்டுள்ளன.

கிழக்கில் Ontario மற்றும் Quebec மாகாணங்கள் இந்த மாற்றத்திற்குத் தயாராக இருந்தாலும், அமெரிக்காவின் New York மாகாணமும் இதைப் பின்பற்றினால் மட்டுமே நடைமுறைப்படுத்துவோம் என நிபந்தனை விதித்துள்ளன.

Manitoba மாகாணம் இப்போதைக்கு இதற்கு முன்னுரிமை அளிக்கவில்லை எனத் தெரிவித்துள்ளது.

இருப்பினும், பெரும்பாலான மாகாணங்களில் இந்த வார இறுதியில் கடிகார முட்கள் ஒரு மணித்தியாலம் முன்னோக்கி நகர்த்தப்படவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles