உணவுப் பொருட்கள் விலைக் கட்டுப்பாடு – புதிய முயற்சியில் இறங்கும் டொராண்டோ!

டொராண்டோ (Toronto) நகரில் உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பைக் கட்டுப்படுத்தும் நோக்கில் புதிய திட்டமொன்றை அமுல்படுத்த நகர சபை திட்டமிட்டுள்ளது.

அதன்படி, இலாப நோக்கற்ற அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் வியாபார நிலையங்களை மாநகரசபையே நேரடியாக நடத்த​ தீர்மானிக்கப்பட்டுள்ளது.

டொராண்டோ நகரின் டவுன்டவுன், நார்த் யார்க் (North York), ஸ்கார்பரோ (Scarborough) மற்றும் எட்டோபிகோ (Etobicoke) ஆகிய நான்கு பகுதிகளில் முன்னோடித் திட்டமாக இந்தக் கடைகள் திறக்கப்படவுள்ளன.

இருப்பினும், இந்தத் திட்டம் குறித்துப் பொருளாதார நிபுணர்கள் கடும் கவலை வெளியிட்டுள்ளனர்.

இது குறித்துக் கருத்துத் தெரிவித்த Daily Bread Food Bank தலைமை அதிகாரி நீல் ஹெதர்டன் (Neil Hetherington) மேற்படித் துறை​  மிகக் குறைந்த இலாப வரம்பைக் (Razor-thin margins) கொண்டது என்றும், இதில் அனுபவமில்லாத மாநகரசபை இறங்குவது சவாலானது என்றும் எச்சரித்துள்ளனர்.

பாரிய தனியார் நிறுவனங்களுடன் (Grocery giants)  விநியோகச் சங்கிலி மற்றும் கொள்வனவு விலையில் போட்டி போடுவது கடினம் என பது அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்தத் திட்டத்தை முன்மொழிந்த நகர சபை உறுப்பினர் அந்தோனி பெருசா (Anthony Perruzza), இந்த வியாபாரங்களுக்கு சொத்து வரி மற்றும் அபிவிருத்திக் கட்டணங்களை மாநகரசபை தள்ளுபடி செய்வதன் மூலம் மக்களுக்குக் குறைந்த விலையில் உணவை வழங்க முடியும் என நம்புக்கை தெரிவித்துள்ளார்.

மறுமுனையில் வான்கூவர் (Vancouver) மாநகரசபை இவ்வாறான திட்டங்களை நடைமுறைப்படுத்துவதை விட ஏற்கனவே உள்ள கூட்டுறவு நிறுவனங்களுக்கு ஆதரவளிப்பதே சிறந்தது எனத் தெரிவித்துள்ளது.

Related Articles

Latest Articles