“ஈரான் அணு ஆயுதத் திறனை இழக்கும் வரை போர்நிறுத்தம் சாத்தியமில்லை” – நட்பு நாடுகளுக்கு துணை நிற்பதில் தயக்கமில்லை என்கிறார் கார்னி!

மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், அவுஸ்திரேலியப் பிரதமர் அந்தோனி அல்பானிஸ் மற்றும் கனடியப் பிரதமர் மார்க் கார்னி ஆகியோர் கான்பெராவில் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்கும் திறனை முழுமையாக இழக்கும் வரை முறையான போர்நிறுத்தம் ஒன்றை ஏற்படுத்த முடியாது என இரு தலைவர்களும் வலியுறுத்தினர்.

“தற்போது போர் பரவி வருவதை நாம் காண்கிறோம். பொதுமக்கள் மற்றும் பொதுக் கட்டமைப்புகள் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும். இவை போர்நிறுத்தத்திற்கு அவசியமான நிபந்தனைகளாகும்,” என கனடியப் பிரதமர் மார்க் கார்னி தெரிவித்தார்.

ஈரானின் இராணுவ இலக்குகள் மீது சனிக்கிழமை முதல் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களுக்கு இரு நாடுகளும் தமது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளன.

ஈரானுக்கு எதிரான தாக்குதலில் கனடா நேரடியாகப் பங்கேற்குமா எனக் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த பிரதமர் மார்க் கார்னி,

“தாக்குதலில் பங்கேற்பதை என்னால் ஒருபோதும் திட்டவட்டமாக நிராகரிக்க முடியாது. கனடியர்களைப் பாதுகாக்கவும், எமது நட்பு நாடுகளுக்குத் தேவைப்படும்போது அவர்களுடன் துணை நிற்கவும் நாம் எப்போதும் தயார்” எனத் தெரிவித்தார்.

அதேபோல், உலகளாவிய ஒழுங்குமுறை சிதைந்து வருவதன் அறிகுறியாகவே ஈரான் மீதான தாக்குதல்களைத் தான் பார்ப்பதாகவும் (Australia) Melbourne நகரில் உள்ள Lowy Institute அமைப்பில் உரையாற்றிய அவர், இந்தத் தாக்குதல்களைத் தான் “சிறு வருத்தத்துடன்” ஆதரிப்பதாகவும் கூறியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது

Video thumbnail
கனடா சுற்றுலாத்துறையில் பாரிய வளர்ச்சி - ஒரே காலாண்டில் $28.4 பில்லியன்!
01:05
Video thumbnail
பாதுகாப்பு சாதனங்களிலிருந்தே Bitcoin கொள்ளை!
01:34
Video thumbnail
வானில் மோதிய இரண்டு பயிற்சி விமானங்கள் - ஒருவர் உயிரிழப்பு!
00:57
Video thumbnail
Hamilton குடியிருப்பாளர்களுக்கு இரண்டு மாதங்களுக்குப் பிறகு கிடைத்த சுத்தமான குடிநீர்!
01:00
Video thumbnail
நிலவில் இன்று பெரும் மோதல்! SpaceX ரொக்கெட் துண்டு நிலவை மோதுகிறது!
01:02
Video thumbnail
Ontario, Quebec வாகன ஓட்டிகளுக்கு நற்செய்தி — வியாழன் 10¢ குறைகிறது எரிபொருள் விலை
01:48
Video thumbnail
மனைவி கொலையில் கைதான முன்னாள் போதகர் சிறையில் தற்கொலை: கடிதத்தில் குற்றமற்றவர் என உரிமை கோரல்!
01:03
Video thumbnail
WestJet வேலைநிறுத்தம்: தாயகம் திரும்ப முடியாமல் தவிக்கும் கனடா பயணிகள்!
01:19
Video thumbnail
மழை வெள்ளத்தில் மூழ்கிய Niagara - St. Catharines, Lincoln நகரங்களில் அவசரநிலை!
00:57
Video thumbnail
'Toronto Islands' போலி Ferry Tickets விற்கும் மோசடி இணையதளங்கள் குறித்து எச்சரிக்கை!
01:24

Related Articles

Latest Articles