இருட்டில் மின்னும் புதிய 2 டொலர் நாணயம்!

கனடாவின் அடையாளமான சீ.என் டவர் (CN Tower) கட்டி முடிக்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

இதனை முன்னிட்டு, இருட்டில் மின்னும் விசேடமான புதிய 2 டொலர் நாணயத்தை ரோயல் கனடியன் மின்ட் (Royal Canadian Mint) வெளியிட்டுள்ளது.

ஒன்டாரியோவின் பெல்லிவில் (Belleville, Ont.) பகுதியைச் சேர்ந்த கலைஞர் கார்ல் வீன்ஸ் (Carl Wiens) இந்த நாணயத்தை வடிவமைத்துள்ளார்.

செவ்வாய்க்கிழமை டவரின் அவதானிப்பு தளத்தில் வைத்து இந்த நாணயம் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த நாணயத்தின் ஒரு பக்கத்தில் 1976-ஆம் ஆண்டின் டொராண்டோ நகரின் தோற்றமும், மறுபக்கத்தில் தற்போதைய 2026-ஆம் ஆண்டின் நவீன நகரத் தோற்றமும் பொறிக்கப்பட்டுள்ளன.

இந்த நாணயம் இருட்டில் மின்னும் தன்மையினை கொண்டுள்ளமை இதன் சிறப்பம்சமாக காணப்படுகிறது.

கனடிய வரலாற்றில் இத்தகைய தொழில்நுட்பத்துடன் பொதுப் புழக்கத்திற்கு வரும் இரண்டாவது நாணயம் இதுவாகும்.

இது ஒரு விசேட சேகரிப்பு நாணயம் (Collector’s piece) அல்ல என்பதால், விரைவில் உங்கள் கைகளிலும் புழக்கத்திற்கு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சீ.என் டவர் இரவில் ஒளிமயமாகத் தெரிவதைப் பிரதிபலிக்கும் வகையில் இந்த வடிவமைப்பு அமைந்துள்ளதாக கலைஞர் கார்ல் வீன்ஸ் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

Video thumbnail
13,000 பேர் நடுவே நடந்த துப்பாக்கிச் சூடு — ஒரு மாதத்திற்குப் பிறகு முக்கிய திருப்பம்!
00:36
Video thumbnail
15 வயது சிறுவனுக்கு U.S. Consulate மீது துப்பாக்கிச் சூடு நடத்த பணம் கொடுக்கப்பட்டதா?
01:45
Video thumbnail
Toronto-வின் Danforth இந்த வார இறுதியில் மக்கள் கடலாக மாறப்போகிறது!
01:12
Video thumbnail
ஒருவரின் கணினியிலிருந்து ஆரம்பித்த தாக்குதல்! 165 நிறுவனங்களையும் 100 மில்லியன் மக்களையும் பாதித்ததா
01:57
Video thumbnail
Metrolinx முதல் LCBO வரை — ஒன்ராறியோவின் 8 முக்கிய பொது நிறுவனங்கள் அரசின் ஆய்வுக்குள்!
01:10
Video thumbnail
றொரண்டோவில் வாடகை செலுத்த முடியாமல் திணறும் மக்களுக்கு நல்ல செய்தியா?
01:27
Video thumbnail
ஒரே வாரத்தில் ஓராண்டு மழையின் நான்கில் ஒரு பங்கு!
00:49
Video thumbnail
ஐந்து நிமிடங்களில் வீட்டைவிட்டு வெளியேற வேண்டிய நிலை!
01:07
Video thumbnail
Metro Vancouver முழுவதையும் சூழ்ந்த காட்டுத்தீப் புகை!
01:28
Video thumbnail
கனடா சுற்றுலாத்துறையில் பாரிய வளர்ச்சி - ஒரே காலாண்டில் $28.4 பில்லியன்!
01:05

Related Articles

Latest Articles