கனடாவின் பிரதமர் Mark Carney, தனது சொந்த ஊரான Edmonton பகுதியில் நடைபெற்ற பேரணியில் கலந்துகொண்டு, ஆல்பர்ட்டா (Alberta) மாகாணத்தில் தனது இரண்டு நாள் ஆதரவு பிரசாரத்தை நிறைவு செய்தார்.
Edmonton இல் நடைபெற்ற “Forever Canadian” பேரணியில் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் கனேடியக் கொடிகளை ஏந்தி உற்சாகமாகப் பங்கேற்றனர். Edmonton, Red Deer, மற்றும் Calgary ஆகிய பகுதிகளில் மக்களை நேரில் சந்தித்த பிரதமர், ஆல்பர்ட்டா கனடாவிலேயே தொடர்ந்து நீடிக்க வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
கனடாவிற்கு எதிராக வாக்களிப்பது பெரும் வாய்ப்பு இழப்புகளுக்கே வழிவகுக்கும் என்றும், கனடா ஒருபோதும் அமெரிக்காவின் 51-வது மாநிலமாக மாறாது என்றும் அவர் வலியுறுத்தினார். வரவிருக்கும் திங்கள்கிழமை, ஆல்பர்ட்டா மக்கள் கனடாவில் நீடிப்பதா அல்லது வெளியேறுவது குறித்த இரண்டாவது வாக்கெடுப்பை நடத்துவதா என்பது குறித்து வாக்களிக்கவுள்ளனர்.










