கனடாவில் (Canada) குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு வழங்கப்படும் ‘கனடா மளிகை மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் உதவித்தொகை’ (Canada Groceries and Essentials Benefit) தங்களுக்கு எவ்வித பெரிய மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். முன்னர் GST/HST கடன் தொகையாக வழங்கப்பட்ட இந்நிதி உதவி, தற்போது புதிய பெயரில் காலாண்டு அடிப்படையில் வழங்கப்பட்டு வருகின்றது.
இதன் மூலம் தனிநபர் ஒருவர் ஆண்டிற்கு அதிகபட்சமாக $679 டாலர்களையும், நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளைக் கொண்ட குடும்பங்கள் $1,826 டாலர்கள் வரையிலும் பெற முடியும்.
இருப்பினும், அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம் மற்றும் வீட்டு வாடகை, வரி போன்றவை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், இந்த உதவித்தொகை மிகவும் சொற்பமானது என்றும், பலருக்கு இந்நிதி உதவி கிடைக்கப்பெறவில்லை என்றும் மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
