அமெரிக்க போக்குவரத்து திணைக்களம் (U.S. Department of Transportation – DOT) வெளியிட்டுள்ள புதிய விதிகளின்படி, திட்டமிடப்படாத பராமரிப்புப் பணிகள் (unscheduled maintenance), மோசமான வானிலை, இணையத் தாக்குதல்கள் மற்றும் பயணிகள் இறப்பு உள்ளிட்ட 10 வகை காரணங்களால் ஏற்படும் விமானத் தாமதங்கள் இனி விமான நிறுவனங்களின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டவையாக வகைப்படுத்தப்படவுள்ளன.
இந்த புதிய விதி நடைமுறைக்கு வரும்போது, பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு உணவக மற்றும் விடுதி வவுச்சர்களை (hotel/meal vouchers) வழங்க வேண்டிய கட்டாயம் விமான நிறுவனங்களுக்கு இருக்காது என்று பயணத் துறை நிபுணர் கேட்டி நாஸ்ட்ரோ (Katy Nastro) தெரிவித்துள்ளார்.
இதற்கு எதிராக ‘பிளையர்ஸ் ரைட்ஸ்’ (FlyersRights) அமைப்பின் தலைவர் போல் ஹட்சன் (Paul Hudson) வழக்குத் தொடர்ந்துள்ளார்.
இருப்பினும், கனடாவிலிருந்து புறப்படும் அல்லது கனடாவை வந்தடையும் பயணிகளுக்கு கனடாவின் வான்பயணிகள் பாதுகாப்பு விதிகள் (APPR) தொடர்ந்தும் பாதுகாப்பளிக்கும் என்று கூறப்படுகிறது.
அமெரிக்காவிற்குள் மட்டும் பயணம் செய்யும் கனடியர்களே இதனால் அதிகம் பாதிக்கப்படுவர் என்றும் ‘எயர் பாசஞ்சர் ரைட்ஸ்’ (Air Passenger Rights) அமைப்பின் தலைவர் காபோர் லூகாஸ் (Gábor Lukács) சுட்டிக்காட்டியுள்ளார்.
