ஹாமில்டனில் West Nile வைரஸ் பாதிப்பு – அபாய நிலை ‘High’ ஆக உயர்வு!

கனடாவின் Ontario மாகாணத்தில் உள்ள Hamilton நகரில், இந்த ஆண்டிற்கான முதலாவது West Nile Virus மனித பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

Hamilton Public Health இந்தத் தகவலை உறுதி செய்ததைத் தொடர்ந்து, நகரில் West Nile வைரஸ் தொடர்பான அபாய நிலை “High” ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

West Nile Virus பெரும்பாலும் தொற்றுக்குள்ளான நுளம்பு கடிப்பதன் மூலம் மனிதர்களுக்கு பரவுகிறது.

இந்த வைரஸால் பாதிக்கப்படுபவர்களில் சுமார் 80 சதவீதமானவர்களுக்கு எந்தவித அறிகுறிகளும் தென்படாமல் இருக்கலாம்.

ஆனால் குறிப்பாக வயதானவர்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களுக்கு காய்ச்சல் உள்ளிட்ட உடல்நல பாதிப்புகள் ஏற்படலாம்.

அரிதான சந்தர்ப்பங்களில், மூளை அல்லது மூளையைச் சுற்றியுள்ள படலங்களில் அழற்சி போன்ற கடுமையான பாதிப்புகளும் ஏற்படலாம். இவ்வாறான தீவிர பாதிப்பு சுமார் ஒரு சதவீத நோயாளிகளில் ஏற்படக்கூடும் என சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

தொற்றுக்குள்ளான நுளம்பு கடித்திருந்தால், பொதுவாக 2 முதல் 14 நாட்களுக்குள் அறிகுறிகள் தோன்றக்கூடும்.

இதனால் பொதுமக்கள் நுளம்புகடியில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளுமாறு Hamilton Public Health அறிவுறுத்தியுள்ளது.

Hamilton நகரில் நுளம்பு பெருக்கத்தை கட்டுப்படுத்த பொது இடங்களில் மருந்து தெளிக்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Related Articles

Latest Articles