ஸ்கார்பரோ உணவகத்தில் தீவைத்த சம்பவம் — மூன்று பேர் தப்பியோட்டம்

டொராண்டோ ஸ்கார்பரோவிலுள்ள ஒரு உணவகத்திற்கு தீ வைக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து பொலிசார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இந்த சம்பவம் வெள்ளிக்கிழமை அதிகாலை 2:45 மணியளவில் ரொரன்ஸ் அவென்யூ ஈஸ்ட் அன்ட் கெனடீ வீதி அருகிலுள்ள ஷொப்பிங் பிளாசாவில் அமைந்துள்ள உணவகத்திற்கே தீ வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சந்தேகத்திற்கிடமான மூன்று நபர்கள் கட்டிடத்தின் முன்பகுதியில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து விட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை பொலிசார் தேடி வருகின்றனர்.

தீ வைத்து சேதப்படுத்தியதற்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை என்று பொலிசார் தெரிவித்தனர்.

Related Articles

Latest Articles