ஸ்காபரோவில் ஆயுதங்களுடன் வீடு புகுந்து கொள்ளை!

டொரண்டோ – ஸ்கார்பரோ பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் ஆயுதங்களுடன் புகுந்து நபர்கள் கொள்ளையிட்டுச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சுத்தியல், கத்திகளுடன் வீட்டிற்குள் நுழைந்த கொள்ளையர்கள் வீட்டில் இருந்தவர்களை கொடுரமாக தாக்கி, பணம், நகை என்பவற்றைக் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.

Finch Avenue East மற்றும் McCowan Road அருகே இந்தக் கொள்ளைச் சம்பவம் ஏப்ரல் 11ம் திகதி வெள்ளிக்கிழமை அதிகாலை 2.15 அளவில் நடந்துள்ளது.

இது ஒரு பாதுகாப்பான இடம் என்று நம்பினோம். ஆனால் பக்கத்து வீட்டிலேயே இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கிறது என்றால், அது நம்மையும் அச்சுறுத்துகிறது என கொள்ளையிடப்பட்ட வீட்டின் அயலவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

சந்தேகநபர்கள் ஆயுதங்களுடன் இருப்பார்கள் என்றும் இவ்வாறான சம்பவங்கள் நடக்கும் போது அவர்களின் அருகில் செல்ல வேண்டாம் என்றும் பொலிசார் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளனர்.

Related Articles

Latest Articles