வாழ்க்கை திருப்தி குறித்த ஆய்வு – கனடாவில் ஆல்பர்ட்டா மாகாணம் கடைசி இடம்!

கனடா புள்ளிவிபரவியல் திணைக்களம் (StatCan) அண்மையில் வெளியிட்ட வாழ்க்கை திருப்தி குறித்த ஆய்வை நடத்தியிருந்தது.

அதன்படி, கனடியர்களிடையே மாகாண ரீதியாகவும் வயது ரீதியாகவும் பெரும் மாற்றங்கள் காணப்படுகின்றன.

2025 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் 46.1 சதவீத கனடியர்கள் தங்கள் வாழ்க்கையில் அதிக திருப்தியுடன் இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

இது முந்தைய ஆண்டை விட 5.7 சதவீதம் உயர்வாகும்.

கியூபெக் (Quebec) மாகாணம் 57.3 சதவீதத்துடன் முதலிடத்தில் உள்ளது.

மாறாக, ஆல்பர்ட்டா (Alberta) மாகாணத்தில் மிகக் குறைந்த அளவாக 38.1 சதவீதத்தினர் மட்டுமே அதிக திருப்தியுடன் உள்ளனர்.

நியூ பிரன்ஸ்விக் (New Brunswick) 53.4 சதவீதத்துடன் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது.

ஒண்டாரியோ (Ontario) 42 சதவீதத்துடன் குறைந்த திருப்தி கொண்ட மாகாணங்களில் இரண்டாவது இடத்தில் உள்ளது.

75 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட முதியவர்களில் 64 சதவீதத்தினர் மகிழ்ச்சியாக உள்ளனர்.

ஆனால், 25 முதல் 34 வயதுடைய இளைஞர்களில் வெறும் 32.7 சதவீதத்தினர் மட்டுமே அதிக திருப்தியுடன் இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

மக்களின் வாழ்க்கையின் நோக்கம் மற்றும் எதிர்காலம் குறித்த நம்பிக்கையான பார்வையும் 2024 ஆம் ஆண்டை விட மேம்பட்டுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

Video thumbnail
Mississauga அடுக்குமாடிக் கட்டிடத்தில் சந்தேகத்திற்கிடமான தீ – 11 பேர் மருத்துவமனையில்!
01:01
Video thumbnail
Pickering அணு உலைகள் 10 ஆண்டுகளுக்கு நிறுத்தம்! $26.8 பில்லியன் திட்டம்!
01:43
Video thumbnail
Scarborough வாகனத் தரிப்பிடத்தில் வீடற்றவர்களுக்கு புதிய குடியிருப்பு!
01:55
Video thumbnail
Alberta பிரிவினை: Calgary சபையிலும் பிளவு!
01:20
Video thumbnail
Alberta பிரிவினை: வாக்கெடுப்புக்குப் பின்னும் தொடரும் பிரிவினை விவாதம்!
01:06
Video thumbnail
100 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய காட்டுப்பூனை இனம் கண்டுபிடிப்பு!
01:25
Video thumbnail
ஒன்ராறியோவில் சூதாட்டப் பாதிப்பு - அவசர சிகிச்சைக்கு வருவோர் இரட்டிப்பு!
01:23
Video thumbnail
GO ரயிலில் மது அருந்தி தொந்தரவு! 3 சிறுமிகள் மீது குற்றச்சாட்டு!
01:16
Video thumbnail
மழை குறைகிறது! Toronto Weekend Weather
01:10
Video thumbnail
Greenland-இல் அமெரிக்காவுக்கு நிரந்தர அதிகாரம்?
01:49

Related Articles

Latest Articles