வான்கூவரில் ஒரு லிட்டர் பெற்றோல் $2-ஐ தாண்டியது: மேலும் அதிகரிக்க வாய்ப்பு!

கனடாவின் வான்கூவர் (Vancouver) நகரில் பெற்றோல் விலை ஒரு லிட்டருக்கு 2 டொலர்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது.

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் மற்றும் உலகின் முக்கிய எண்ணெய் போக்குவரத்துப் பாதையான ஹார்முஸ் நீரிணையில் (Strait of Hormuz) ஏற்பட்டுள்ள முடக்கம் காரணமாக இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.

திங்கட்கிழமை நிலவரப்படி வான்கூவரில் ஒரு லிட்டர் பெற்றோலின் சராசரி விலை $2.02 ஆகக் காணப்பட்டது.

உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் 20 சதவீத பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், வரும் நாட்களில் பெற்றோல் மற்றும் டீசல் விலை மேலும் 5 முதல் 6 சதங்கள் வரை அதிகரிக்கக்கூடும் என GasBuddy ஆய்வாளர் Matt McClain எச்சரித்துள்ளார்.

டீசல் விலை லிட்டருக்கு $2.22 ஆக உயர்ந்துள்ளதால், போக்குவரத்து மற்றும் சரக்கு விநியோகத்தில் ஈடுபட்டுள்ள வணிகங்கள் கடும் நஷ்டத்தைச் சந்திப்பதுடன், சில நிறுவனங்கள் மூடப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.

இச் சூழலில் மக்கள் தங்கள் பயணங்களைக் குறைத்துக்கொள்ளுமாறும், மின்சார வாகனங்களுக்கு (EV) மாறுவது குறித்துப் பரிசீலிக்குமாறும் நிபுணர்கள் ஆலோசனை வழங்குகின்றனர்.

Video thumbnail
ஒரே வாரத்தில் ஓராண்டு மழையின் நான்கில் ஒரு பங்கு!
00:49
Video thumbnail
ஐந்து நிமிடங்களில் வீட்டைவிட்டு வெளியேற வேண்டிய நிலை!
01:07
Video thumbnail
Metro Vancouver முழுவதையும் சூழ்ந்த காட்டுத்தீப் புகை!
01:28
Video thumbnail
கனடா சுற்றுலாத்துறையில் பாரிய வளர்ச்சி - ஒரே காலாண்டில் $28.4 பில்லியன்!
01:05
Video thumbnail
பாதுகாப்பு சாதனங்களிலிருந்தே Bitcoin கொள்ளை!
01:34
Video thumbnail
வானில் மோதிய இரண்டு பயிற்சி விமானங்கள் - ஒருவர் உயிரிழப்பு!
00:57
Video thumbnail
Hamilton குடியிருப்பாளர்களுக்கு இரண்டு மாதங்களுக்குப் பிறகு கிடைத்த சுத்தமான குடிநீர்!
01:00
Video thumbnail
நிலவில் இன்று பெரும் மோதல்! SpaceX ரொக்கெட் துண்டு நிலவை மோதுகிறது!
01:02
Video thumbnail
Ontario, Quebec வாகன ஓட்டிகளுக்கு நற்செய்தி — வியாழன் 10¢ குறைகிறது எரிபொருள் விலை
01:48
Video thumbnail
மனைவி கொலையில் கைதான முன்னாள் போதகர் சிறையில் தற்கொலை: கடிதத்தில் குற்றமற்றவர் என உரிமை கோரல்!
01:03

Related Articles

Latest Articles