வடக்கு சாஸ்காச்சுவானில் சோகம் – கரடி தாக்கியதில் 25 வயது இளைஞர் பலி!

வடக்கு சாஸ்காச்சுவானில் (Saskatchewan) உள்ள தொலைதூர விமான ஓடுதளத்திற்கு அருகில் கரடி ஒன்று தாக்கியதில் 25 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சாஸ்காடூன் (Saskatoon) நகரிலிருந்து வடகிழக்கே சுமார் 700 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பாயிண்ட்ஸ் நார்த் (Points North) பகுதிக்கு அருகே கடந்த வெள்ளிக்கிழமை இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

தாக்குதலில் ஈடுபட்ட அந்தக் கரடி சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டது.

அதன் உடல் பிரேதப் பரிசோதனைக்காகச் சாஸ்காடூனில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து வொல்லாஸ்டன் லேக் (Wollaston Lake) பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டுள்ளது. தற்போது வன அலுவலர் சேவை மற்றும் வனவிலங்கு மனிதத் தாக்குதல் தடுப்புப் பிரிவு ஆகியன மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன.

வனப்பகுதிகளில் கரடிகளைச் சந்தித்தால், அவற்றிடமிருந்து போதிய தூரத்தைப் பேணுமாறும், கண்களை நேருக்கு நேர் பார்க்காமல் தாழ்ந்த குரலில் பேசியபடி மெதுவாக அவ்விடத்தை விட்டு விலகிச் செல்லுமாறும் பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Video thumbnail
Mississauga அடுக்குமாடிக் கட்டிடத்தில் சந்தேகத்திற்கிடமான தீ – 11 பேர் மருத்துவமனையில்!
01:01
Video thumbnail
Pickering அணு உலைகள் 10 ஆண்டுகளுக்கு நிறுத்தம்! $26.8 பில்லியன் திட்டம்!
01:43
Video thumbnail
Scarborough வாகனத் தரிப்பிடத்தில் வீடற்றவர்களுக்கு புதிய குடியிருப்பு!
01:55
Video thumbnail
Alberta பிரிவினை: Calgary சபையிலும் பிளவு!
01:20
Video thumbnail
Alberta பிரிவினை: வாக்கெடுப்புக்குப் பின்னும் தொடரும் பிரிவினை விவாதம்!
01:06
Video thumbnail
100 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய காட்டுப்பூனை இனம் கண்டுபிடிப்பு!
01:25
Video thumbnail
ஒன்ராறியோவில் சூதாட்டப் பாதிப்பு - அவசர சிகிச்சைக்கு வருவோர் இரட்டிப்பு!
01:23
Video thumbnail
GO ரயிலில் மது அருந்தி தொந்தரவு! 3 சிறுமிகள் மீது குற்றச்சாட்டு!
01:16
Video thumbnail
மழை குறைகிறது! Toronto Weekend Weather
01:10
Video thumbnail
Greenland-இல் அமெரிக்காவுக்கு நிரந்தர அதிகாரம்?
01:49

Related Articles

Latest Articles