கனடியப் வைன் துறையில் தடைகளை நீக்கினால் பில்லியன் கணக்கில் வருமானம் எகிறும்!

கனடாவின்  வைன் (Wine) உற்பத்தித் துறையில் உள்ள தடைகளை நீக்கினால், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) பில்லியன் கணக்கான டொலர்களைக் கூடுதலாகச் சேர்க்க முடியும் என ‘டெலாய்ட்’ (Deloitte) நிறுவனத்தின் புதிய ஆய்வு தெரிவித்துள்ளது.

தற்போது கனடிய ஒயின் விற்பனை உள்நாட்டுச் சந்தையில் 28.8 சதவீதமாக உள்ளது.

இதனை அடுத்த 15 ஆண்டுகளில் 51 சதவீதமாக உயர்த்தினால், நாட்டின் GDP-க்கு ஆண்டுதோறும் 13.7 பில்லியன் டொலர்கள் வருமானம் கிடைக்கும்.

கனடாவில் தயாரிக்கப்படும் ஒரு போத்தல் ஒயினை வாங்குவதன் மூலம் பொருளாதாரத்திற்கு சுமார் $89.99 லாபம் கிடைக்கிறது. இது இறக்குமதி செய்யப்படும் ஒயினை விட ஆறு மடங்கு அதிகமானது.

மாகாணங்களுக்கு இடையிலான வர்த்தகக் கட்டுப்பாடுகள், மாறுபட்ட வரி விதிப்புகள் மற்றும் உரிம நடைமுறைகள் வைன் உற்பத்தியாளர்கள் தங்கள் பொருட்களை நாடு முழுவதும் விற்பனை செய்வதற்குப் பெரும் தடையாக உள்ளன.

உதாரணமாக, ஒரு நடுத்தர கனடிய ஒயின் நிறுவனம் சுமார் $372,500 வரி செலுத்தும் நிலையில், அதே அளவு உற்பத்தி செய்யும் அமெரிக்க நிறுவனம் வெறும் $27,000 மட்டுமே வரி செலுத்துகிறது.

இந்தச் சமமற்ற நிலை உள்நாட்டு உற்பத்தியாளர்களைப் பாதிக்கிறது.

வைன் துறைக்கெனத் தனியான தேசிய மூலோபாயம் (Federal wine strategy) வகுக்கப்பட வேண்டும் என்றும், மாகாணங்களுக்கு இடையிலான நேரடி விற்பனைத் தடைகளை நீக்க வேண்டும் என்றும் இந்த அறிக்கை வலியுறுத்துகிறது.

கனடா பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) உள்நாட்டுத் தொழில்துறையை வலுப்படுத்த முனைப்பு காட்டி வரும் நிலையில், இந்த வைன் துறை நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், கிராமப்புற வேலைவாய்ப்புக்கும் முக்கியப் பங்களிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Video thumbnail
Mississauga அடுக்குமாடிக் கட்டிடத்தில் சந்தேகத்திற்கிடமான தீ – 11 பேர் மருத்துவமனையில்!
01:01
Video thumbnail
Pickering அணு உலைகள் 10 ஆண்டுகளுக்கு நிறுத்தம்! $26.8 பில்லியன் திட்டம்!
01:43
Video thumbnail
Scarborough வாகனத் தரிப்பிடத்தில் வீடற்றவர்களுக்கு புதிய குடியிருப்பு!
01:55
Video thumbnail
Alberta பிரிவினை: Calgary சபையிலும் பிளவு!
01:20
Video thumbnail
Alberta பிரிவினை: வாக்கெடுப்புக்குப் பின்னும் தொடரும் பிரிவினை விவாதம்!
01:06
Video thumbnail
100 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய காட்டுப்பூனை இனம் கண்டுபிடிப்பு!
01:25
Video thumbnail
ஒன்ராறியோவில் சூதாட்டப் பாதிப்பு - அவசர சிகிச்சைக்கு வருவோர் இரட்டிப்பு!
01:23
Video thumbnail
GO ரயிலில் மது அருந்தி தொந்தரவு! 3 சிறுமிகள் மீது குற்றச்சாட்டு!
01:16
Video thumbnail
மழை குறைகிறது! Toronto Weekend Weather
01:10
Video thumbnail
Greenland-இல் அமெரிக்காவுக்கு நிரந்தர அதிகாரம்?
01:49

Related Articles

Latest Articles