றொராண்டோவில் அதிரடியாக உயரும் எரிபொருள் விலை: வாகன ஓட்டுனர்கள் கவலை!

Greater Toronto Area (GTA) பகுதியில் உள்ள வாகன ஓட்டுனர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில், சனிக்கிழமை முதல் எரிபொருள் விலை லிட்டருக்கு 6 சதத்தினால் (6 cents) உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன்படி, உள்ளூர் எரிபொருள் நிலையங்களில் ஒரு லிட்டர் பெற்றோலின் சராசரி விலை 152.9 சதங்களாக அதிகரிக்கும் என En-Pro நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஈரான் (Iran) போர் மற்றும் அதன் காரணமாக Strait of Hormuz ஊடாக மேற்கொள்ளப்படும் எண்ணெய் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள தடைகளே இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணமாகும்.

கடந்த சனிக்கிழமை முதல் தற்போது வரை பெற்றோல் விலை 14 சதத்தினால் உயர்ந்துள்ளது. வார இறுதியில் ஏற்படவுள்ள உயர்வையும் சேர்த்தால், ஒரே வாரத்தில் விலை 20 காசுகள் (15%) அதிகரித்துள்ளது.

அமெரிக்காவிலும் பெற்றோல் விலை உயர்ந்துள்ளதுடன், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையும் கணிசமாக அதிகரித்துள்ளது.

Related Articles

Latest Articles