றொரண்டோவில் பதற்றம் – 16 பாடசாலைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

றொரண்டோ (Toronto) நகரம் முழுவதும் உள்ள 16 பாடசாலைகளுக்கு ஒரே நபரால் வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளதாக ரொறன்ரோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

செவ்வாய்க்கிழமை காலை நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள 16 பாடசாலைகளுக்குத் தொலைபேசி ஊடாக வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளன.

இந்த மிரட்டல்களை அடுத்து லெஸ்லிவில் (Leslieville) பகுதியில் உள்ள புரூஸ் ஜூனியர் பொதுப் பாடசாலை (Bruce Jr. Public School) மற்றும் ஸ்கார்பரோ (Scarborough) பகுதியில் உள்ள செயின்ட் அகஸ்டின் செமினரி (St Augustine Seminary) ஆகியன தற்காலிகமாக வெளியேற்றப்பட்டன.

பொலிஸார் இரு பாடசாலைகளையும் முழுமையாகச் சோதனை செய்த பின்னர், அங்கு ஆபத்து ஏதுமில்லை என உறுதிப்படுத்தினர்.

அதன் பின்னரே மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் மீண்டும் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

இந்த மிரட்டல்கள் நம்பகமானவை என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என பொலிஸார் கூறியுள்ளனர்.

இருப்பினும், ஒரே நபரால் இந்த மிரட்டல்கள் விடுக்கப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.

இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த TDSB ஊடகப் பேச்சாளர் ரையன் பேர்ட் (Ryan Bird), மிரட்டல்களை மிகவும் தீவிரமாக அணுகுவதாகவும், பாதிக்கப்பட்ட பாடசாலைகளின் பெற்றோருக்குத் தேவையான தகவல்கள் வழங்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் குறித்து ரொறன்ரோ பொலிஸார் தற்போது தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Video thumbnail
வீட்டை நேரில் பார்த்தும் Rental Scam-ல் சிக்க முடியுமா? — ஆம்!
01:11
Video thumbnail
2020-ல் உங்கள் CRA account hack செய்யப்பட்டதா? உங்களுக்கு $5,000 வரை கிடைக்க வாய்ப்பு இருக்கலாம்!
01:07
Video thumbnail
ஒரு Seatbelt காரணமாக முழு விமானமும் ரத்தாகுமா? — Victoria-வில் அதுதான் நடந்துள்ளது!
01:00
Video thumbnail
றொரொண்டோவில் மட்டுமல்ல—கல்கரியிலும் ரக்கூன்களின் நடமாட்டம் அதிகரிக்கிறதா?
01:11
Video thumbnail
நள்ளிரவு பொலிஸ் நடவடிக்கை… சில நிமிடங்களில் 19 வயது இளைஞர் உயிரிழப்பு!
01:33
Video thumbnail
Facebook, Instagram சிறுவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியதா?
01:33
Video thumbnail
Weekend Plan இருக்கிறதா? வெளியே புறப்படுவதற்கு முன் Scarborough வானிலையை பாருங்கள்!
01:01
Video thumbnail
Toronto Zoo-வுக்கு வந்துள்ள புதிய குட்டி விருந்தினர்!
00:43
Video thumbnail
13,000 பேர் நடுவே நடந்த துப்பாக்கிச் சூடு — ஒரு மாதத்திற்குப் பிறகு முக்கிய திருப்பம்!
00:36
Video thumbnail
15 வயது சிறுவனுக்கு U.S. Consulate மீது துப்பாக்கிச் சூடு நடத்த பணம் கொடுக்கப்பட்டதா?
01:45

Related Articles

Latest Articles