கனடாவில் உயரும் எரிபொருள் விலை – மூன்றில் ஒரு பங்கு மக்கள் நிதி நெருக்கடியில்!

கனடாவில் எரிபொருள் விலை மற்றும் பணவீக்கம் கடுமையாக  அதிகரித்து வருகிறது.

இதனால், மூன்றில் ஒரு பங்கு கனடியர்கள் தமது நிதி நிலைமை மோசமடைந்துள்ளதாக கருத்து கணிப்பு ஒன்றில் தெரியவந்துள்ளது.  

Canada Pulse Insights நடத்திய ஆய்வில், 33 சதவீதமானோர் கடந்த மாதத்தை விடத் தமது நிதி நிலை மோசமடைந்துள்ளதாகக் கூறியுள்ளனர்.

60 சதவீதமானோர் மாற்றமில்லை என்றும், 10 சதவீதமானோர் நிலைமை மேம்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

ஆண்டு வருமானம் $50,000 க்குக் குறைவாகப் பெறுபவர்களே (40%) இதில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பிராந்திய ரீதியாக அட்லாண்டிக் கனடா (Atlantic Canada) மக்கள் (37%) அதிக நிதி நெருக்கடியைச் சந்திப்பதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

புதன்கிழமை அன்று எரிபொருள் விலை லிட்டருக்கு 10 காசுகள் உயர்ந்து 195.9 சென்ட்களை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது 2022 கோடை காலத்திற்குப் பிந்தைய மிக உயர்ந்த விலையாகும்.

80 சதவீதமானோர் தமது அன்றாட நிதித் தேவைகள் குறித்து கவலை கொண்டுள்ளனர்.

சுமார் 13 சதவீதமானோர் தமது கடன் அல்லது அடமானக் கொடுப்பனவுகளை (Mortgage) செலுத்த முடியாமல் போகலாம் என அஞ்சுகின்றனர்.

சுமார் 14 சதவீதமான கனடியர்கள் போதிய வேலையின்மை காரணமாகத் தமது வேலையை இழக்க நேரிடும் என அச்சம் வெளியிட்டுள்ளனர்.

ஈரான் போர்ச் சூழல் மற்றும் உலகளாவிய விநியோகத் தடைகள் காரணமாக எரிபொருள் விலை தொடர்ந்து ஏறுமுகமாக உள்ளமை நுகர்வோரை மேலும் நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளது.

Related Articles

Latest Articles