றொரண்டோவில் கோடை வெப்பம் ஆரம்பம் – அடுத்த வாரம் 30 பாகை செல்சியஸை எட்டும்!

வெப்பமான காலநிலையை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும்  றொரண்டோ (Toronto) மக்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி கிட்டியுள்ளது.

அடுத்த வாரம் முதல் நகரின் வெப்பநிலை கணிசமாக உயரவுள்ளது.

வரும் செவ்வாய்க்கிழமை அன்று காற்றில் ஈரப்பதம் (Humidity) அதிகரிப்பதால், றொரண்டோவின் வெப்பநிலை 30 பாகை செல்சியஸை எட்டியது போன்ற உணர்வைத் தரும் என வானிலை ஆய்வாளர் பில் கூல்டர் (Bill Coulter) தெரிவித்துள்ளார்.

வரும் நீண்ட வார இறுதி நாட்களில் (Long weekend) வானிலை மிகவும் ரம்மியமாக இருக்கும்.

வெள்ளிக்கிழமை அன்று 21 பாகை செல்சியஸாகவும், சனிக்கிழமை சில இடங்களில் மழை பெய்தாலும் 23 பாகை செல்சியஸாகவும் வெப்பநிலை காணப்படும்.

திங்கட்கிழமை 25 பாகை செல்சியஸாகவும், செவ்வாய்க்கிழமை 22 பாகை செல்சியஸாகவும் அதிகபட்ச வெப்பநிலை பதிவாகும்.

ஈரப்பதத்துடன் சேர்த்துப் பார்க்கும்போது இது 30 பாகை  செல்சியஸாக உணரப்படும்.

குளிர்ச்சியான மற்றும் மழையுடனான காலநிலை முடிவுக்கு வந்து, கோடை போன்ற வெப்பம் தொடங்கவுள்ளதால், கனமான வசந்த கால ஜாக்கெட்டுகளை (Spring jackets) இனி ஓரங்கட்டலாம் என பில் கூல்டர் (Bill Coulter) குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த வாரம் வரை மழையுடன் கூடிய குளிர் நிலவும் என்பதால், தற்காலிகமாக ஆடைகளில் நெகிழ்வுத்தன்மையைக் கடைப்பிடிக்குமாறு மக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Related Articles

Latest Articles