றொரண்டோவிற்கு விசேட வானிலை எச்சரிக்கை – இடியுடன் கூடிய மழையைத் தொடர்ந்து கடும் குளிர்!

கனடா சுற்றுச்சூழல் ஆய்வு மையம் (Environment Canada) விசேட எச்சரிக்கையொன்றை விடுத்துள்ளது.

றொரண்டோ (Toronto) மற்றும் கிரேட்டர் டொராண்டோ மற்றும் ஹாமில்டன் பகுதிகளில் (GTHA) இன்று சனிக்கிழமை பலத்த மழை மற்றும் இடியுடன் கூடிய மழையினால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இன்று பிற்பகல் முதல் சுமார் 10 முதல் 20 மி.மீ வரை மழை பெய்யக்கூடும்.

ஏற்கனவே கடந்த சில நாட்களாக பெய்த மழையினால் நிலம் அதிக ஈரப்பதத்துடன் காணப்படுவதால், தாழ்வான பகுதிகளில் வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

ஒரு குளிர்காற்று தொகுதி (Cold front) நகர்ந்து வருவதால், இன்று இரவு முதல் வெப்பநிலை வேகமாகச் சரிவடையும்.

ஞாயிற்றுக்கிழமை பகல் நேர வெப்பநிலை 10°C  இனை தொடவே சிரமப்படும் என்பதுடன், இரவு வேளையில் பூஜ்யத்திற்கும் கீழே செல்லும்.

திங்கட்கிழமை டொராண்டோவில் அதிகபட்ச வெப்பநிலை வெறும் 5°C ஆகவும், குறைந்தபட்சம் -1°C ஆகவும் பதிவாகும்.

இது ஏப்ரல் மாத இறுதியில் நிலவ வேண்டிய இயல்பான வெப்பநிலையை விட மிகக் குறைவானதாகும்.

வானிலை மாற்றத்தினால் ஏற்படக்கூடிய விளைவுகளை எதிர்கொள்ளத் தயாராக இருக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Related Articles

Latest Articles