றொரண்டோ வீட்டுச் சந்தை – ஏப்ரல் மாதத்தில் விற்பனை 7% அதிகரிப்பு!

பெரிய றொரண்டோ பகுதியில் (Greater Toronto Area) வீடுகளின் விலைகள் வீழ்ச்சியடைந்துள்ளன.

இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதத்தில் வீட்டு விற்பனை கணிசமாக அதிகரித்துள்ளதாக றொரண்டோ பிராந்திய ரியல் எஸ்டேட் சபை (TRREB) தெரிவித்துள்ளது.

கடந்த ஏப்ரல் மாதத்தில் மொத்தம் 5,946 வீடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இது கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடும்போது 7 சதவீத உயர்வாகும்.

வீடுகளின் சராசரி விற்பனை விலை 4.9 சதவீதம் குறைந்து $1,051,969 ஆக பதிவாகியுள்ளது.

அதேபோல், ஒரு சாதாரண வீட்டைக் குறிக்கும் கூட்டு அளவுகோல் விலை (Composite benchmark price) ஆண்டுக்கு ஆண்டு 6.6 சதவீதம் சரிந்துள்ளது.

அதன்படி, விலைகள் மற்றும் கடன் வாங்கும் செலவுகள் குறைந்துள்ளன.

இது வசந்த கால சந்தையில் வீட்டு உரிமையாளர்களை ஈர்க்கும் காரணியாக அமைந்துள்ளதாக TRREB இன் தலைமை தகவல் அதிகாரி ஜேசன் மெர்சர் (Jason Mercer) தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் மாதத்தில் 17,097 புதிய வீடுகள் விற்பனைக்கு வந்துள்ளன. இது கடந்த ஆண்டை விட 9.3 சதவீதம் குறைவாகும். மொத்தமாகச் சந்தையில் உள்ள வீடுகளின் எண்ணிக்கை (Active listings) 6.4 சதவீதம் குறைந்து 25,110 ஆக உள்ளது.

விலைச் சரிவு காரணமாகக் காத்திருந்த வாங்குபவர்கள் தற்போது சந்தைக்குத் திரும்பியுள்ளதால் விற்பனை வேகம் அதிகரித்துள்ளதாக அவதானிக்கப்படுகிறது.

Video thumbnail
றொரொண்டோவில் மட்டுமல்ல—கல்கரியிலும் ரக்கூன்களின் நடமாட்டம் அதிகரிக்கிறதா?
01:11
Video thumbnail
நள்ளிரவு பொலிஸ் நடவடிக்கை… சில நிமிடங்களில் 19 வயது இளைஞர் உயிரிழப்பு!
01:33
Video thumbnail
Facebook, Instagram சிறுவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியதா?
01:33
Video thumbnail
Weekend Plan இருக்கிறதா? வெளியே புறப்படுவதற்கு முன் Scarborough வானிலையை பாருங்கள்!
01:01
Video thumbnail
Toronto Zoo-வுக்கு வந்துள்ள புதிய குட்டி விருந்தினர்!
00:43
Video thumbnail
13,000 பேர் நடுவே நடந்த துப்பாக்கிச் சூடு — ஒரு மாதத்திற்குப் பிறகு முக்கிய திருப்பம்!
00:36
Video thumbnail
15 வயது சிறுவனுக்கு U.S. Consulate மீது துப்பாக்கிச் சூடு நடத்த பணம் கொடுக்கப்பட்டதா?
01:45
Video thumbnail
Toronto-வின் Danforth இந்த வார இறுதியில் மக்கள் கடலாக மாறப்போகிறது!
01:12
Video thumbnail
ஒருவரின் கணினியிலிருந்து ஆரம்பித்த தாக்குதல்! 165 நிறுவனங்களையும் 100 மில்லியன் மக்களையும் பாதித்ததா
01:57
Video thumbnail
Metrolinx முதல் LCBO வரை — ஒன்ராறியோவின் 8 முக்கிய பொது நிறுவனங்கள் அரசின் ஆய்வுக்குள்!
01:10

Related Articles

Latest Articles