றொரண்டோ வீட்டில் 30,000 டொலர் மதிப்பிலான பொருட்கள் திருட்டு : பெண் ஒருவர் உட்பட நால்வருக்கு வலைவீச்சு!

றொரண்டோவின் (Toronto) Annex பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றில் இருந்து சுமார் $30,000 மதிப்பிலான பொருட்களைத் திருடிச் சென்ற மூன்று ஆண்கள் மற்றும் ஒரு பெண் அடங்கிய 4 சந்தேகநபர்களை பொலிஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Spadina Avenue மற்றும் Dupont Street பகுதிக்கு அருகே அமைந்த வீடொன்றில் ஜூன் 16 முதல் ஜூன் 18 வரையிலான காலப்பகுதியில் இந்தத் திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சந்தேகநபர்கள் பலமுறை வீட்டிற்குள் பலவந்தமாக நுழைந்து, மதுபானங்கள் (Wine and spirits), கலைப் பொருட்கள் (Artwork) மற்றும் உரிமையாளரின் முக்கிய ஆவணங்களைக் கவர்ந்து சென்றுள்ளனர்.

திருடப்பட்ட பொருட்களை வாடகைக்கு எடுக்கப்பட்ட வெள்ளை நிற வேன் (Rental van) ஒன்றில் ஏற்றிச் சென்றுள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

சந்தேகநபர்களில் முதல் நபர் Under Armour ஹூடியும், இரண்டாமவர் சிவப்பும் கருப்பும் கலந்த ஆடைகளும், மூன்றாமவர் ‘TERROR’ எனக் எழுதப்பட்ட பச்சை நிற ஹூடி அணிந்த 35 வயது மதிக்கத்தக்க நபரும் ஆவர்.

பெண் சந்தேகநபர் பொன்னிற முடியுடன் முழு கருப்பு நிற ஆடை அணிந்திருந்ததாக பொலிஸார் விவரித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்வதுடன், தகவல் தெரிந்தவர்கள் 416-808-1400 எனும் இலக்கத்திற்கு பொலிஸாரையோ அல்லது Crime Stoppers அமைப்பையோ தொடர்புகொள்ளுமாறு கோரப்பட்டுள்ளனர்.

Video thumbnail
பி.சி மாகாணத் தேர்தல் அறிவிப்பு : அக்டோபர் 24-இல் வாக்களிப்பு!
01:13
Video thumbnail
கனடாவில் அதிகரிக்கும் 'சாம்பல் விவாகரத்து' (Grey Divorce): 50 வயதிற்கு மேற்பட்டோர் பிரிவது ஏன்?
01:25
Video thumbnail
ஸ்கார்பாரோ வீதி மறுசீரமைப்பு: 'ஆபத்தான' வாகனம் ஓட்டுவதாக மக்கள் கவலை!
01:29
Video thumbnail
பிரின்சஸ் மார்கரெட் புற்றுநோய் அறக்கட்டள: $100 மில்லியன் வரலாற்றுச் சாதனை நன்கொடை!
01:06
Video thumbnail
றொராண்டோவில் இலையுதிர்காலம் தொடக்கம்: இந்த முறை மிதமான காலநிலை நிலவும் என கணிப்பு!
01:03
Video thumbnail
பெலாரஸிடம் பொட்டாஷ் வாங்கும் ட்ரம்ப்பின் முயற்சி - "இரத்த பொட்டாஷ்" என சஸ்கட்வான் முதல்வர் கண்டனம்!
01:44
Video thumbnail
ஜனநாயகக் கட்சியினர் வென்றாலும் அமெரிக்கா-கனடா வர்த்தகப் போரில் மாற்றம் வருமா?
01:22
Video thumbnail
'Simple Investor' நிலுவைப்பணம் வழங்கப்படாமல் நிறுத்தம்!
01:10
Video thumbnail
ஸ்கார்பரோ மருத்துவமனை நிறுத்தத்தில் துப்பாக்கிச் சூடு: 70 வயது தம்பதி பரிதாப பலி!
01:00
Video thumbnail
Mississauga அடுக்குமாடிக் கட்டிடத்தில் சந்தேகத்திற்கிடமான தீ – 11 பேர் மருத்துவமனையில்!
01:01

Related Articles

Latest Articles