றொரண்டோ தணியும் உஷ்ணம் – வார இறுதியில் இதமான வானிலை எதிர்பார்ப்பு!

றொரண்டோ (Toronto) மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் (GTA) கடந்த சில நாட்களாக நீடித்து வந்த புழுக்கமான மற்றும் உஷ்ணமான வானிலை மாறி, இந்த வார இறுதியில் மிகவும் இதமான வானிலை நிலவக்கூடும் என CP24 வானிலை ஆய்வாளர் Bill Coulter தெரிவித்துள்ளார்.

வியாழக்கிழமை பெய்த மழையைத் தொடர்ந்து வறண்ட மற்றும் குளிர்ச்சியான காற்று இப்பகுதிக்குள் நுழைந்துள்ளதால், வெள்ளிக்கிழமை சில இடங்களில் லேசான மழை பெய்தாலும், வானம் படிப்படியாக மேகமூட்டமின்றித் தெளிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சனிக்கிழமை பிரகாசமாகவும், ஞாயிற்றுக்கிழமை நல்ல வெயிலுடனும், உஷ்ணக் குறைவு காரணமாக மிகவும் இதமான சூழல் நிலவும் என Environment Canada கணித்துள்ளது.

இவ்விரு நாட்களிலும் அதிகபட்ச வெப்பநிலை 28 முதல் 29 பாகை செல்சியஸ் (C) வரை பதிவாகலாம்.

இருப்பினும், திங்கட்கிழமை முதல் மீண்டும் வெப்பமண்டலக் காற்று இப்பகுதிக்குள் நுழையவுள்ளதால், செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் வெப்பநிலை முறையே 31, 33 மற்றும் 30 பாகை செல்சியஸ் வரை உயர்ந்து, மீண்டும் கடுமையான புழுக்கமும் வெப்பமும் ஏற்படக்கூடும் என Bill Coulter எச்சரித்துள்ளார்.

வியாழக்கிழமை வெப்பநிலை சற்று குறைந்து, மீண்டும் மழைக்கான வாய்ப்புகள் உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

Video thumbnail
கனடா சுற்றுலாத்துறையில் பாரிய வளர்ச்சி - ஒரே காலாண்டில் $28.4 பில்லியன்!
01:05
Video thumbnail
பாதுகாப்பு சாதனங்களிலிருந்தே Bitcoin கொள்ளை!
01:34
Video thumbnail
வானில் மோதிய இரண்டு பயிற்சி விமானங்கள் - ஒருவர் உயிரிழப்பு!
00:57
Video thumbnail
Hamilton குடியிருப்பாளர்களுக்கு இரண்டு மாதங்களுக்குப் பிறகு கிடைத்த சுத்தமான குடிநீர்!
01:00
Video thumbnail
நிலவில் இன்று பெரும் மோதல்! SpaceX ரொக்கெட் துண்டு நிலவை மோதுகிறது!
01:02
Video thumbnail
Ontario, Quebec வாகன ஓட்டிகளுக்கு நற்செய்தி — வியாழன் 10¢ குறைகிறது எரிபொருள் விலை
01:48
Video thumbnail
மனைவி கொலையில் கைதான முன்னாள் போதகர் சிறையில் தற்கொலை: கடிதத்தில் குற்றமற்றவர் என உரிமை கோரல்!
01:03
Video thumbnail
WestJet வேலைநிறுத்தம்: தாயகம் திரும்ப முடியாமல் தவிக்கும் கனடா பயணிகள்!
01:19
Video thumbnail
மழை வெள்ளத்தில் மூழ்கிய Niagara - St. Catharines, Lincoln நகரங்களில் அவசரநிலை!
00:57
Video thumbnail
'Toronto Islands' போலி Ferry Tickets விற்கும் மோசடி இணையதளங்கள் குறித்து எச்சரிக்கை!
01:24

Related Articles

Latest Articles