மொன்றியலில் ஓடுதளத்தை விட்டு விலகிய எயார் கனடா விமானம்: பயணிகள் பாதுகாப்பாக மீட்பு!

வியாழக்கிழமை பிற்பகல் Montreal-Pierre Elliott Trudeau International Airport இல் தரையிறங்கிய Air Canada விமானம் ஒன்று, ஓடுதளத்தை விட்டு விலகி (Runway excursion) புல்வெளிப் பகுதிக்குள் சென்றதால் விமான நிலையச் சேவைகளில் தாமதம் ஏற்பட்டது.

அமெரிக்காவின் LAX (Los Angeles) இல் இருந்து 156 பயணிகள் மற்றும் 6 பணியாளர்களுடன் வந்த AC774 என்ற இந்த விமானம், மாலை 4 மணியளவில் சாதாரணமாகவே தரையிறங்கியது.

எனினும், பிரதான ஓடுதளத்தை விட்டு வெளியேற முற்பட்டபோது இந்த விபத்து நேர்ந்துள்ளது.

இந்த சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்று Air Canada நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.

அத்துடன், இரவு 7:37 மணியளவில் சமூக ஊடகப் பதிவு ஒன்றின் மூலம், விமானத்தில் இருந்த அனைத்துப் பயணிகளும் பணியாளர்களும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு முனையத்திற்குள் (Terminal) அழைத்து வரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Related Articles

Latest Articles