மெட்ரோவில் பழங்குடியின குடும்பத்தின் மீது இனவெறித் தாக்குதல்!

cbc

கனடாவின் மொண்ட்ரியால் (Montreal) நகரில், ‘உண்மை மற்றும் நல்லிணக்கத்திற்கான தேசிய தினத்தை‘ (National Day for Truth and Reconciliation) முன்னிட்டு நடைபெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்றுவிட்டு திரும்பிய கானியென்கேஹாகா (Kanien’kehá:ka) சமூகத்தைச் சேர்ந்த பழங்குடியின குடும்பத்தினர் மீது மெட்ரோ ரயிலில் பெண்ணொருவர் இனவெறித் தாக்குதல் நடத்தியுள்ளார்.

தனது 9 வயது மருமகன் பாரம்பரிய உடையில் இருந்ததைக் கண்டு, அப்பெண் கேலி சித்திர சைகைகளைச் செய்து, வசைபாடியதாக டெகானேகேகே ஸ்டேசி (Tekahné:kake Stacey)  என்ற பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவத்தைப் பதிவுசெய்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட வீடியோவில், அந்தப் பெண் சிறுவனைப் பார்த்து ஏளனம் செய்ததும், ரயிலை விட்டு இறங்கும்போது பையால் தாக்கியதும் பதிவாகியுள்ளது. இதனால் அச்சிறுவன் மிகவும் மனவேதனைக்கு உள்ளாகியுள்ளான்.

இதுகுறித்து சட்ட நடவடிக்கை எதுவும் எடுக்கப்போவதில்லை எனக் கூறியுள்ள ஸ்டேசி, பழங்குடியின மக்களாகத் தங்களுக்கு இத்தகைய இனவெறிச் சம்பவங்கள் புதிதல்ல என கவலை தெரிவித்துள்ளார்

மேலும், தங்களின் அடையாளம் மற்றும் கலாச்சாரத்தை எண்ணித் தொடர்ந்து பெருமிதம் கொள்வோம் என்றும் தெரிவித்துள்ளார்.

Previous articleகனடாவுடனான வர்த்தகப் பிரச்சினைகளைத் தீர்ப்பது கடினம் – அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி தகவல்!
Next articleHyundai Ioniq 9 இருக்கைகளில் தொழில்நுட்பக் கோளாறு : திரும்பப் பெற நடவடிக்கை!