மிரட்டல், குற்றச்செயல் தொடர்பான 111 பேர் கனடாவிலிருந்து வெளியேற்றம்

கனடாவில் மிரட்டிப் பணம் பறித்தல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களுடன் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படும் வெளிநாட்டவர்களுக்கு எதிராக CBSA மேற்கொண்டு வரும் நடவடிக்கையில், இதுவரை 111 பேர் கனடாவிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

Canada Border Services Agency வெளியிட்ட தகவலின்படி, கடந்த ஒரு ஆண்டில் மொத்தம் 188 removal orders பிறப்பிக்கப்பட்டுள்ளன.

அதில் அதிகமான நடவடிக்கைகள் British Columbia மற்றும் Greater Toronto Area-வில் இடம்பெற்றுள்ளன.

இந்த நடவடிக்கை முதலில் 2025 ஆகஸ்ட் மாதம் Pacific மற்றும் Prairie பகுதிகளில் ஆரம்பிக்கப்பட்டு, மூன்று மாதங்களின் பின்னர் GTA-விற்கும் விரிவுபடுத்தப்பட்டதாக CBSA தெரிவித்துள்ளது.

மிரட்டல் தொடர்பான துப்பாக்கிச் சூடு, ஆயுதக் குற்றங்கள், வலுக்கட்டாயமாக சிறைபிடித்தல் மற்றும் குற்ற அமைப்புகளுடனான தொடர்புகள் உள்ளிட்ட காரணங்களால் சிலர் வெளியேற்றப்பட்டதாகவும் CBSA கூறியுள்ளது.

கடந்த ஆண்டில் மட்டும் கனடாவில் அனுமதிக்க முடியாதவர்களாகக் கருதப்பட்ட 23,160 பேர் நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டதாக CBSA தெரிவித்துள்ளது.

இதில் 1,010 பேர் கடுமையான குற்றச்செயல், தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல், மனித உரிமை மீறல், போர்க்குற்ற சந்தேகங்கள் உள்ளிட்ட காரணங்களால் அனுமதிக்க முடியாதவர்களாகக் கருதப்பட்டவர்கள்.

மிரட்டல் வலையமைப்புகளை முறியடிக்க மத்திய அரசு மற்றும் உள்ளூர் காவல்துறையுடன் இணைந்து நடவடிக்கை தொடரும் என Public Safety அமைச்சர் Gary Anandasangaree தெரிவித்துள்ளார்.

Related Articles

Latest Articles