அமெரிக்காவின் மியாமி சர்வதேச விமான நிலையத்தில் இடம்பெற்ற பயங்கர விமான விபத்தில் ஐவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஐவர் காயமடைந்துள்ளனர்.
Amazon நிறுவனத்திற்காக Puerto Rico விலிருந்து சரக்குகளை எடுத்துச் சென்ற Boeing விமானம், ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் மியாமி விமான நிலையத்தில் தரையிறங்கியபோது Runway-யின் எல்லையைத் தாண்டிச் சென்று விபத்துக்குள்ளானது.
Runway-யை விட்டு வெளியேறிய விமானம் பல வாகனங்களை மோதி, பின்னர் தீப்பிடித்தது.
விமானம் மோதிய வாகனங்களுக்குள் சிக்கியிருந்தவர்களை தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் கடும் முயற்சியின் பின்னர் மீட்டுள்ளனர்.
விமானம் ஏன் Runway முடிவுக்கு முன்பாக நிறுத்த முடியாமல் போனது என்பது இதுவரை உறுதியாகத் தெரியவில்லை.
விபத்துக்கு முன்பு விமானிகள் எந்த அவசரநிலையையும் அறிவிக்கவில்லை என்றும் ஆரம்ப தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விபத்து தொடர்பாக அமெரிக்காவின் FAA மற்றும் National Transportation Safety Board விசாரணைகளை ஆரம்பித்துள்ளன.
