கனடாவின் Toronto நகரின் கிழக்குக் பகுதியில் அமைந்துள்ள Biidaasige Park பூங்காவின் 10 ஏக்கர் அளவிலான பிரமாண்ட விரிவாக்கம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக ஜூலை 25 அன்று திறந்து வைக்கப்பட்டது.
இந்நகரத்தின் ஒரு தலைமுறை காலத்தில் அமைக்கப்பட்ட மிகப்பெரிய பூங்காவான இது, இந்த விரிவாக்கத்தின் மூலம் மேலும் பெரிதாகியுள்ளது.
தொழில்துறை நிலமாக இருந்த இப்பகுதியை மிகச்சிறந்த நீர்முனை சுற்றுலாத் தலமாக (waterfront destination) மாற்றும் நோக்கோடு, மூன்று அடுக்கு அரசாங்கங்களின் $1.4 பில்லியன் டொலர் செலவிலான திட்டத்தின்கீழ் இந்தப் பூங்கா உருவாக்கப்பட்டு வருகிறது.
இப்பூங்காவில் சாகச விரும்பிகளுக்கான zipline வசதிகள் மற்றும் பழமைவாய்ந்த, மீட்டெடுக்கப்பட்ட 300-tonne எடையுள்ள பிரமாண்டமான Atlas Crane ஆகியவை அமைக்கப்பட்டிருப்பது இதன் முக்கிய சிறப்பம்சங்களாகும்.
விடுமுறை நாட்களைக் கழிக்கவும் பொழுதுபோக்கிற்கும் இது நகர மக்களின் புதிய தேர்வாக உருவெடுத்துள்ளது.
